மேலும் அறிய

CM Speech: "மாணவி சத்யஸ்ரீ மரணத்தால் மன வேதனை அடைந்தேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம்

CM Speech: மாணவி சத்யஸ்ரீக்கு நடந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

CM Speech: ”கல்லூரி மாணவி சத்யஸ்ரீக்கு நடந்த துயரத்தை கண்டு மன வேதனை அடைந்தேன். சத்யஸ்ரீ மரணம் போன்ற சம்பவங்கள் இனி யாருக்கும் நடக்கக்கூடாது” என முதலமைச்சர் ஸ்டாலின் வேதனையுடன் பேசியுள்ளார்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ”சமூக கல்வி அவசியம் என கல்லூரி மாணவி சத்யஸ்ரீ கொலையை சூட்டிக் காட்டி பேசியுள்ளார். தன்னை போன்று மற்ற உயிரையும் காக்கும் பக்குவம் மக்களுக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

கல்லூரி மாணவி மரணம்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றுக் கொண்டிருந்த மாணவி சத்யஸ்ரீயை, சதீஷ் என்ற இளைஞர் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். இதில்  ரயிலில் சிக்கி மாணவி சத்யஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சத்யஸ்ரீ தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஆந்திரத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாக இளைஞர் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். சத்யஸ்ரீ உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்ட தந்தை மாணிக்கம், மகளை நினைத்து கதறியுள்ளார். இந்த நிலையில் மகளின் இழப்பை ஏற்க முடியாமலும் பிரிவை தாங்கி கொள்ள முடியாமலும் தந்தை மாணிக்கம் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் மாணவி சத்யஸ்ரீரியை ரயில் முன்  தள்ளிவிட்டு தப்பியோடிய சதீஷை துரைப்பாக்கத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷை சைதாப்பேட்டை குற்றவியர் நீதிமன்றத்தில் போலீசார் அடைத்தனர். இளைஞர் சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவி சத்யஸ்ரீ கொலை  வழக்கை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

மாணவி மரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை

"மாணவி சத்யஸ்ரீக்கு நடந்த துயரத்தை கண்டு மன வேதனை அடைந்தேன். சத்யஸ்ரீக்கு நடந்த சம்பவம்  போன்று இனி எந்த பெண்ணுக்கும் நடைபெறக் கூடாது”எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, "ஆண்களின் வலிமை என்பது பெண்களை மதிக்கவும், பாதுகாப்பை தரக்கூடியதாக இருக்க வேண்டும். சில இளைஞர் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பது மாணவி சத்ய ஸ்ரீ உயிரிழப்பு உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகள்  மற்றும் பெற்றோர்கள் இளைய சக்தியை பாதுகாத்து வளர்க்க வேண்டும். மேலும் நல்ல ஒழுக்கம், பண்பும் கொண்டவர்களாக இளைஞர்கள் வளர வேண்டும். நல்ல விதமாக வளர்ந்து சமூகத்துக்கு பங்களிப்பை அளிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் எந்த வகையில் திசை மாற்றாமல் நல்வழியில் செல்வதே பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்" எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget