மேலும் அறிய

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கொரோனா தடுப்பு பணிக்கு தங்க செயினை நிவாரணமாக அளித்து, தனது குடும்ப சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கோரிக்கை விடுத்த பெண்ணின் படிப்புக்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், சேலம் மேட்டூர் அணையை திறக்க சென்றபோது கிடைத்த மனு ஒன்றின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த மனுவை எழுதிய சௌமியா என்ற பெண் தனது தங்க செயினை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கியிருப்பதையும் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில், "சௌமியா ஆகிய நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர். என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும், சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்துவிட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள். ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

எனது தந்தை பணி ஓய்வு பெற்றவந்த சில மாதங்களில், என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12.03.2020-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனது தந்தை ஓய்வுப்பெற்ற சேமிப்புத்தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்துவிட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவச்செலவு சுமார் 13 லட்சம் ஆகிவிட்டது. எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்தபிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு, தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம்.

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”எனது தந்தைக்கு பணி ஓய்வுத் தொகையாக ரூபாய் 7 ஆயிரம் மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூபாய் 3 ஆயிரம் போக, ரூபாய் 4 ஆயிரம் வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்கின்ற வசதிவாய்ப்புகள் எங்களுக்கு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊருக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட பெறும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்ப்பித்து வந்ததாக நான் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்” என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை குறிப்பிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க : https://tamil.abplivகான்வாயை நிறுத்திய முதல்வர்... உடனே தீர்ந்த குறைe.com/videos/news/cm-mk-stalin-stops-his-convoy-to-get-petitions-6045

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
Breaking Tamil LIVE: நகர்புற பகுதிகளில் வசிக்கும் 10 பேரில் 4 பேர் வாக்களிக்கவில்லை - ஜெ.ராதாகிருஷ்ணன்
Breaking Tamil LIVE: நகர்புற பகுதிகளில் வசிக்கும் 10 பேரில் 4 பேர் வாக்களிக்கவில்லை - ஜெ.ராதாகிருஷ்ணன்
DC vs SRH: மீண்டும் அதிரடி காட்டுமா ஹைதராபாத்..? அடங்க மறுக்குமா டெல்லி..? இரு அணிகளும் இன்று மோதல்..!
மீண்டும் அதிரடி காட்டுமா ஹைதராபாத்..? அடங்க மறுக்குமா டெல்லி..? இரு அணிகளும் இன்று மோதல்..!
கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Lok Sabha Election 2024 | முடிந்தது வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைப்புLok Sabha Election 2024 | மனைவியுடன் வாக்களிக்க வந்த சீமான் முகத்தில் ஒரு தேஜஸ்..Veerappan Daughter | வாக்களிக்க வந்த வீரப்பன் மகள் வாக்குவாதம் செய்த பாமகவினர் நடந்தது என்ன?Lok Sabha Election 2024 | எந்த பட்டன் அழுத்தினாலும் பாஜகவுக்கு விழுந்த ஓட்டு?உண்மை என்ன!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
கடந்த 4 மக்களவைத் தேர்தல்கள்! எந்த தொகுதியில் எத்தனை சதவீத வாக்குகள்? ஓர் அலசல்..
Breaking Tamil LIVE: நகர்புற பகுதிகளில் வசிக்கும் 10 பேரில் 4 பேர் வாக்களிக்கவில்லை - ஜெ.ராதாகிருஷ்ணன்
Breaking Tamil LIVE: நகர்புற பகுதிகளில் வசிக்கும் 10 பேரில் 4 பேர் வாக்களிக்கவில்லை - ஜெ.ராதாகிருஷ்ணன்
DC vs SRH: மீண்டும் அதிரடி காட்டுமா ஹைதராபாத்..? அடங்க மறுக்குமா டெல்லி..? இரு அணிகளும் இன்று மோதல்..!
மீண்டும் அதிரடி காட்டுமா ஹைதராபாத்..? அடங்க மறுக்குமா டெல்லி..? இரு அணிகளும் இன்று மோதல்..!
கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
கோவை மக்களவை தொகுதியில் 64.42 சதவீத வாக்குப்பதிவு : முழு விபரம் இதோ..!
Preity Zinta : நெஞ்சினிலே பாடலுக்கு ஒத்திகை.. ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா வீடியோ வைரல்..
நெஞ்சினிலே பாடலுக்கு ஒத்திகை.. ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா வீடியோ வைரல்..
Nadhaswaram 2 : எதிர்நீச்சலுக்கு போட்டியாக வருகிறதா நாதஸ்வரம் 2? 9 மணி ஸ்லாட்டுக்கு வந்த சிக்கல்...
Nadhaswaram 2 : எதிர்நீச்சலுக்கு போட்டியாக வருகிறதா நாதஸ்வரம் 2? 9 மணி ஸ்லாட்டுக்கு வந்த சிக்கல்...
Today Rasipalan: கடகத்துக்கு தன்னம்பிக்கை; சிம்மத்துக்கு பொறுமை- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 20) பலன்கள்!
Today Rasipalan: கடகத்துக்கு தன்னம்பிக்கை; சிம்மத்துக்கு பொறுமை- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 20) பலன்கள்!
Watch video : க்யூட்.. 'போவோமா ஊர்கோலம்' நியூ வெர்ஷன்... மகளின்  வீடியோவை பகிர்ந்த அமித் பார்கவ்
Watch video : க்யூட்.. 'போவோமா ஊர்கோலம்' நியூ வெர்ஷன்... மகளின்  வீடியோவை பகிர்ந்த அமித் பார்கவ்
Embed widget