TN Fishermen Issue: 21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் வலியுறுத்தல்
இந்தியா - இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் தமிழர்களின் படகுகளை ஏலம் விடுவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், மீனவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் மீட்டுதரக்கோடி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக 21 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள், 2 விசைப்படகுகளை உடனே விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா - இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்