மேலும் அறிய

CM MK Stalin Speech: 10,000 சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி.. ரூ 15,000 சுழல் நிதி ஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..

 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி சுழல்நிதி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திஷா ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி சுழல்நிதி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திஷா ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் கூறியதாவது, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மத்திய அரசுத் திட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதை கவனிக்கும் ஊரக வளர்ச்சித்துறையின் திஷா (DISHA) குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 

அதில் முதலமைச்சர் பேசியதாவது, “

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக 2023-2024-ஆம் ஆண்டில் புதியதாக 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குச் சுழல் நிதியாக வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 75 கோடி ரூபாயும், 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக 750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க 3.30 கோடி ரூபாய், 12,287 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் 388 வட்டார கூட்டமைப்புகளின் அலுவலக நிர்வாகிகளுக்கு அளவிலான ஆளுமை மற்றும் நிதிமேலாண்மை குறித்த புத்தாக்கப் பயிற்சி வழங்க 24 கோடியே 96 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023-24-ஆம் ஆண்டில் பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 60.27 கோடி ரூபாயும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 18.64 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 2022-23-ஆம் ஆண்டில் நடைபெற்ற கண்காட்சிகளில் 3,528 சுய உதவிக் குழுக்கள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை செய்துள்ளனர் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய டங்களில் 137 விற்பனை அங்காடி (Kiosk) அமைக்கப்பட்டு சுய உதவிக் குழு தயாரிப்புகளை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுவதுடன், முறையான பேக்கிங் மற்றும் தயாரிப்புகளை தரப்படுத்துவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு மதி வணிக முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க 25 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதையும் தாண்டி 25 ஆயிரம் 642 கோடி ரூபாய் 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி, நமது அரசு சாதனை புரிந்துள்ளது என்பதை என்பதை இங்கு பெருமிதத்துடன் நான் குறிப்பிட விரும்புகிறேன்

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 45 ஆயிரம் கோடி ரூபாயினையும் தாண்டி 47 ஆயிரத்து 34 கோடி ரூபாய் வழங்கி சாதனை புரிந்துள்ளோம்

2023-2024-ஆம் ஆண்டு வங்கிக் கடன் நிணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 30 ஆயிரம் கோடி ரூபாயில் 30:06 2023 வரை சுய உதவிக் குழுக்களுக்கு 5644 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்

2023-24-ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி சந்தை என்ற இணையவழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும் பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தவும். விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் மதி அங்காடிகள் நிறுவப்படுவதுடன் சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 'பதி எக்ஸ்பிரஸ் வாகளங்கள்' வழங்கப்படவுள்ளன. மேலும் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் 'மதி திணை உணவகங்கள்". ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும்   செயல்படுத்தப்படவுள்ளன முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்றுவித்து அவர்களின் பங்கேற்பின் மூலம் தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் ஆண்டில் 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் (சுகம்யா பாரத் அபியான் தடையற்ற சூழலை உருவாக்குவதற்கான இயக்கம்) மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகள் அணுகத்தக்க சூழலை ஊக்கப்படுத்துவதற்காக தணிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

மாநிலம் முழுவதும் 93 கோட்டாட்சியர் அலுவலகங்கள் 312 வட்டாட்சியர் அலுவலகங்கள் 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என மொத்தம் 790 கட்டடங்களில் ரூ 474 கோடி செலவிலும் 200 சுற்றுலா தலங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் தணிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை உழவர் நலத் துறையின் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 284 இதில் 2021 வரை முதல் கட்டமாக, 63 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்பட்டன 2021-22 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக 64 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மற்றும் 2023-ஆம் ஆண்டில் மூன்றாம் கட்டமாக 30 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுள்ளன

'நன்றே செய் அதையும் இன்றே செய்" என்ற வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும் அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோரும் அவ்வாறு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என பேசினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
2025 பிளாஷ் பேக்: பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Embed widget