ஆளுநர் மீது கல் வீசினாங்களா? தூசு கூட விழவில்லை - சட்டப்பேரவையில் பரபர விளக்கம் அளித்த முதல்வர்
ஆளுநரின் வாகனம் மீது கருப்புக்கொடியோ, கற்களோ வீசப்படவில்லை என காவல்துறையில் தெளிவுபடுத்தியுள்ளதாக சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிரான போராட்டம் குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். அதில், ஆளுநரின் வாகனம் மீது கருப்புக்கொடியோ, கற்களோ வீசப்படவில்லை என காவல்துறையில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அரசின் விளக்கங்களை கேட்டு, அதன் பின்னர் அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்திருந்தால் சரி என்று சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு எந்த சமரசமும் செய்துக்கொள்ளாது என்றும், ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாமல் காவல்துறை தன் கடமையை செய்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சொன்ன முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்