மேலும் அறிய

Vocational Courses: தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடி மாணவர்களின் எதிர்காலத்தை அழிப்பதா?- ராமதாஸ் கண்டனம்

மேல்நிலைக் கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலைவாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்தான்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறி தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

'’தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை  மூடவும், 11-ஆம் வகுப்பில் அந்தப் பிரிவுகளில் ஏற்கெனவே சேர்ந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும் பள்ளிக்கல்வித் துறை ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறி வரும் தமிழக அரசு, வேலைவாய்ப்புகளை எளிதில் பெற்றுத் தரக்கூடிய பாடப்பிரிவுகளை மூடுவது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளை உள்ளடக்கிய மேல்நிலைக் கல்வியில் இரு வகையான பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. பொதுப் பாடப்பிரிவு, தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆகியவைதான் அந்த இரு பாடத்திட்டங்கள் ஆகும். பொதுப்பாடப்பிரிவில் கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, கணினி அறிவியல் பிரிவு, கணக்குப் பதிவியல் பிரிவு, வரலாறு பிரிவு உள்ளிட்டவை உள்ளன. தொழிற்கல்வி பாடப்பிரிவில் பொறியியல், வேளாண்மை, கணக்குப் பதிவியல், செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. 

பொதுப் பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதே நேரத்தில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் உள்ள பிரிவுகள் அனைத்தும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை படித்தவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சியின்  காரணமாக எளிதில் வேலைக்குச் செல்ல முடியும். அதனால், இந்த பாடங்களுக்கு வரவேற்பு அதிகம்.

முன்னறிவிப்பு இல்லாமல் மூடுவதா?

ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருகின்றன. திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள்  இது குறித்து பிறப்பித்துள்ள சுற்றறிக்கைகளில் இதற்காக கூறப்பட்டுள்ள காரணங்கள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதாகவும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறி தொழிற்கல்வி  பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இவை உப்பு சப்பற்ற காரணங்கள் ஆகும். இதை ஏற்கவே முடியாது.

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடத்த ஆசிரியர்கள் இல்லை என்பது திசை திருப்புவதற்கான காரணம் ஆகும். பல மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாகவே ஆசிரியர்கள் உள்ளனர். எடுத்துக்காட்டாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்  இந்த ஆண்டில் மூடப்படுகின்றன. ஆனால், அந்த மாவட்டத்தில் இந்த பள்ளிகளை இயக்கத் தேவையான ஆசிரியர்களை விட, கூடுதலாக 15 ஆசிரியர்கள் உள்ளதாக அம்மாவட்டக் கல்வி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. எனவே, ஆசிரியர்கள் இல்லை என்பது தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடக் கூறப்படும் பொய்க் காரணம்.

ஒருவேளை ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் உண்மையாக காரணம் என்றாலும், அதற்கான தீர்வு என்பது ஆசிரியர்களை போதிய எண்ணிக்கையில் நியமிப்பது தானே தவிர, பாடப்பிரிவுகளை மூடுவது அல்ல. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும் என்று சில மாதத்திற்கு முன்புதான் தொழிற்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை தொடர வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்திருந்தால், அப்பிரிவுக்கான ஆசிரியர்களை நியமித்திருக்கலாம். ஆனால், அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமல்ல

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லை என்றால் அப்போதே தெரிந்திருக்கும்; அவ்வாறு தெரிந்திருந்திருந்தால் அப்போதே மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருக்கலாம். ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகளும் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப் படுகின்றன என்றால், அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறை அல்ல... வேறு ஏதோ ஒன்றுதான்.

தமிழ்நாட்டில் மாணவர்களின் தொழிற்திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக நான் முதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு பெருமிதத்துடன் விளம்பரம் செய்து கொள்கிறது. இந்தத் திட்டங்களின் நோக்கம் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களாக மாற்றுவதுதான். இதைத்தான் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் செய்கின்றன.

அதைக் கருத்தில் கொண்டுதான் தொழிற்கல்வி பாடப்பிரிவினருக்கு பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலான தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நிறுத்துவது முரண்பாடுகளின் உச்சம். இது கூடாது.

மேல்நிலைக் கல்வியை முடித்தவுடன் பொறியியல், வேளாண் அறிவியல், செவிலியர் போன்ற படிப்புகளில் சேரவும், வேலைவாய்ப்பு பெறவும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான எளிய வழி தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்தான். அவற்றை மூடி கிராமப்புற, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வெந்நீர் ஊற்றி அழித்து விடக் கூடாது. தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருந்தால், புதிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து பற்றாக்குறையைப் போக்க வேண்டும்’’. 

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget