(Source: ECI/ABP News/ABP Majha)
Kallakurichi Violence: நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; அமைதி காக்க வேண்டுகிறேன்: மாணவி விவகாரத்தில் முதல்வர் வேண்டுகோள்!
சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் " என்று பதிவிட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். (2/2)
— M.K.Stalin (@mkstalin) July 17, 2022
#JUSTIN | அரசின் நடவடிக்கையின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் - முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்https://t.co/wupaoCQKa2 | #Kallakurichi #Student #protest #mkstalin pic.twitter.com/GRhvGBPmPM
— ABP Nadu (@abpnadu) July 17, 2022
நடந்தது என்ன ?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜீலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி கல்லூரி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை சின்னசேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவியின் பிரேதத்தை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை காவல்துறை சார்பில் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் உயிரிழந்த ஸ்ரீமதியின் உடற்கூறாய்வு அறிக்கையை பெறுவதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.
இந்தநிலையில் ஸ்ரீமதியின் உயிரிழப்புக்கு காரணமான கல்வி நிறுவனத்தை மூட வேண்டும் கல்வி நிறுவனத்தின் தாளாளரை கைது செய்ய வேண்டும், சிபிசிஐடி விசாரணை வேண்டும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பேரணியாக வந்த ஸ்ரீமதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரின் தடுப்பு கட்டைகளை தாண்டி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இருந்தபோதிலும் போராட்டக்காரர்கள் கல்வி நிறுவன தாளாளரை கைது செய்ய வேண்டும், கல்வி நிறுவனத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்