மேலும் அறிய
Advertisement
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நல்லமநாயுடு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
’’வாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து - தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளி என முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி’’
சென்னை பெரியார் நகரில் வசித்து வந்தவர் நல்லம நாயுடு (83). போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்பு துறையில் சூப்பிரண்டு வரை இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் நல்லம நாயுடு. 1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமிக்கப்பட்டார்.
அன்று முதல் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரையில் பெரிதும் பேசப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் நல்லம நாயுடு. இவரது தலைமையிலான 18 அதிகாரிகள் கொண்ட போலீஸ் படையை தான் ஜெயலலிதா வீட்டை சோதனையிட்டு அவரது ஆடம்பர வாழ்க்கையை வெளி உலகிற்கு காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான போது நல்லம நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2006ல் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய போது நல்லம நாயுடு ஜெயலலிதா வழக்கு விசாரணை அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டின் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது அந்த வழக்கை தீர்ப்பிற்கு தேவையான முக்கிய ஆதாரங்களை கொடுத்தவர் நல்லம நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுக ஆட்சியில் அதிமுக ஊழல் வழக்குகளை விசாரிக்க நல்லம நாயுடுவை சிறப்பு அதிகாரியாக நியமிக்க ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை நல்லம நாயுடு தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில் சென்னை பெரவலூரில் உள்ள நல்லம நாயுடுவின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்களும் நல்லம நாயுடுவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நல்லம நாயுடுவின் மரணம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முக்கிய ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரியாகவும் - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் எஸ்.பி.யாகவும் இருந்து ஒய்வு பெற்ற நல்லம்ம நாயுடு அவர்கள் வயது முதிர்வு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக - எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நியாயத்தையும் - நீதியையும் நிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாகப் பணியாற்றியவர். ஊழல் வழக்குகளை - குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் வழக்குகளை விசாரித்தவர். உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தவுடன் “நீதி வென்றது” என்று அவர் அளித்த பேட்டி இன்றும் என் நினைவில் இருக்கிறது. சமீபத்தில்தான் “என் கடமை - ஊழல் ஒழிக” என்ற புத்தகத்தை என்னிடம் நேரில் வழங்கி - துறையில் தான் சந்தித்த சவால்கள் - அதை எதிர்கொண்ட விதம் ஆகியவை குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் விசாரணை அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டு- பொது வாழ்வில் ஊழல் ஒழிப்பு என்பதை தனது நெஞ்சில் சுமந்து - தான் பணியாற்றிய துறைக்கும், பொதுப்பணிக்கும் இறுதிவரை விசுவாசமாக இருந்த ஒரு போராளியான காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்த சோகத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் - அவரோடு பணியாற்றிய சக காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion