மேலும் அறிய

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாட்டை துரைமுருகன், ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அண்ணன் சீமான் !” என குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, புலி மற்றும் கழுகு சேர்ந்து இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருப்பதோடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. விஜய்க்கு எதிராக ரஜினியின் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க, சீமான் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

ரஜினி மற்றும் சீமான் இடையேயான பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் வரை நீண்டதாக கூறப்படுகிறது. இதில் தமிழக அரசியல் சூழல், விஜயின் அரசியல் பயணம், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் திமுக ஆட்சி என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தபோது, சீமான் அதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தார். தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆள வேண்டுமென எதிர்ப்புக்குரல் எழுப்பி, ரஜினியை கன்னடர் என்ற பொருபடும் விதமாகவும் சாடினார். இதனால், ரஜினி ரசிகர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தான், ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில், போலி என்கவுண்டர் குறித்து பேசியிருந்ததை சீமான் பாராட்டினார். இதையடுத்து, சீமானை தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தத ரஜினி, நேரில் பேச விருப்பமும் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையிலேயே ரஜினி மற்றும் சீமான் இடையேயான சந்திப்பு அரங்கேற்யுள்ளது.

தேர்தலில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி, அமைப்பு ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் போன்ற நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதையும் காண முடிகிறது. அதோடு, சீமான் பின் திரண்ட இளைஞர்கள் தற்போது, புதியதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய் பக்கம் அணி சேர தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜயை தொடர்ந்து சீமான் சரமாரியாக விமர்சித்து வருகிறார். இந்த சூழலில் தான், ரஜினியை சந்தித்து நட்பு பாராட்டி, சீமான் தனக்கு ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இன்றைய சூழலில் தமிழ் சினிமா துறையில் விஜயின் நேரடி போட்டியாளராக இருப்பது ரஜினி மட்டுமே. எனவே, அவருடன் நெருக்கம் காட்டுவது தனக்கு பலனளிக்கும் என சீமான் நம்புவதாக தெரிகிறது. 

ஜெயிலர் பட இசைவெளியிட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. விஜயை தான் ரஜினி காக்கா என மறைமுகமாக சாடியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தான் சாட்டை துரைமுருகன் கழுகு மற்றும் புலி சேர்ந்துள்ள படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம், ஏற்கனவே விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் தீவிரமாக களமாடி வரும் ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க, நாம் தமிழர் கட்சி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அமைப்பு ரீதியாக ஏற்பட்டுள்ள பின்னடைவு, விஜய் பக்கம் திரும்பியுள்ள இளைஞர்களின் கவனம் ஆகியவற்றை ஈடுசெய்யவே, கடுமையாக விமர்சித்த ரஜினியுடன் தற்போது சீமான் இணக்கம் காட்ட தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget