JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
வழக்கமாக ஜேஇஇ மெயின் தேர்வு 2 அமர்வுகளாக நடக்கும். முதல் அமர்வு 2025 ஜனவரி மாதத்திலும் இரண்டாம் அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும்.
![JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? JEE Main 2025 January Session Registration Closes today Nov 22, Know how to Apply JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/13/fdbe203f83aa79e1aa8ffe0893876d201712999629123651_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜேஇஇ மெயின் எனப்படும் பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (நவ.22) கடைசித் தேதி ஆகும். இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலைத் தேர்வு), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது. இதற்கிடையே ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது.
2 அமர்வுகளாக தேர்வு
இந்தத் தேர்வு வழக்கமாக 2 அமர்வுகளாக நடக்கும். முதல் அமர்வு 2025 ஜனவரி மாதத்திலும் இரண்டாம் அமர்வு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும்.
இந்த நிலையில், 2025 ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜனவரி 22 முதல் 31 வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளன. தேர்வு ஆங்கிலம், தமிழ், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தியன், பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில் தேவையான விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.
* எனினும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது முக்கியம்.
ஆன்லைன் வழியாக கிரெடிட்/ டெபிட் / நெட் பேங்க்கிங் / யூபிஐ மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தை இன்று இரவு 11.50 வரை செலுத்தலாம்.
ஹால் டிக்கெட் எப்போது?
தேர்வு மையங்கள் குறித்த விவரம் 2025 ஜனவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக, ஹால் டிக்கெட் வெளியிடப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/
தொலைபேசி எண்: 011- 40759000
இ- மெயில் முகவரி: jeemain@nta.ac.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)