Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா , சரத்குமார் , ரஹ்மான் , அம்மு அபிராமி நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் நிறங்கள் மூன்று
நிறங்கள் மூன்று
துருவங்கள் 16 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்தவர் கார்த்திக் நரேன். அடுத்தடுத்து இவர் இயக்கிய மாஃபியா , மாறன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது இவர் இயக்கியுள்ள நிறங்கள் மூன்று திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நிறங்கள் மூன்று விமர்சனம்
"கார்த்திக் நரேன் சரியான நேரத்தில் கம்பேக் கொடுத்துள்ளார். ஹைபர்லிங் முறையில் சுவாரஸ்யமான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார் . குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது " என பிரபல விமர்சகர் ஒருவர் இப்படத்தைப் பற்றி கூறியுள்ளார்.
#NirangalMoondru - A comeback film for @karthicknaren_M who has treated this one as a hyperlink thriller with a climax that has the shocker and emotional value!
— Rajasekar (@sekartweets) November 20, 2024
The film definitely has the flavour of the director’s debut flick #Dhuruvangal16 but this time, he has experimented… pic.twitter.com/rbks7RavOB
அதர்வாவின் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக வந்துள்ளது. த்ரில்லர் படமாக இருந்தாலும் இந்த படத்தை எமோஷனலாக கொண்டு சென்றது படத்தின் மிகப்பெரிய பலம் என மற்றொரு விமர்சகர்கள் கூறியுள்ளார்.
#NirangalMoondru 4/5
— Celluloid Studio (@studiocelluloid) November 20, 2024
Hyperlink thriller showcasing @karthicknaren_M 's evolution as a filmmaker.
The action sequence featuring @Atharvaamurali stands out technically.
A blend of thrills and emotional resonance, culminating in a shocking and moving climax @DoneChannel1 pic.twitter.com/y8VOyLzmYI
அதர்வா , சரத்குமார் , ரஹ்மான் ஆகிய மூவருக்கு இடையில் நடப்பதே கதை. அம்மு அபிராமி மற்றும் பிற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்
#NirangalMoondru [3.5/5] : A good hyperlink thriller, that ends as a redemption drama.. @Atharvaamurali @realsarathkumar and @actorrahman are the 3 main characters..
— Ramesh Bala (@rameshlaus) November 20, 2024
They along with @Ammu_Abhirami and #Dushyanth have done well.. @jxbe music is fab..
A Better outing from…