(Source: ECI/ABP News/ABP Majha)
CM Stalin Condemns: ”சனாதன வன்மம் நிறைந்த தினமனுவுக்கு கண்டனங்கள்” - தமிழ் நாளிதழை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்த நாளிதழிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்த நாளிதழிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டம் தொடர்பான செய்தி:
கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், அண்மையில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அதுதொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்த தமிழ் நாளிதழ் ஒன்று, கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் அந்த செய்திக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
ஸ்டாலின் கண்டனம்:
கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.
— Udhay (@Udhaystalin) August 31, 2023
கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்! https://t.co/n9kecX7Qb7