மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

மருத்துவமும் கல்வியும் அரசின் இரு கண்கள்.. முதலமைச்சர் முக ஸ்டாலின்!

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 17,16,000 பேர் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதார மாநாடு - 2022-ஐ தொடங்கி வைத்து உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைகின்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற வேண்டும் என்று சொன்னால், இங்கு எனக்கு முன்னால் உரையாற்றியிருக்கக்கூடிய இந்தத் துறையினுடைய அமைச்சரும், தலைமைச் செயலாளர் அவர்களும், துறையினுடைய செயலாளர் அவர்களும் எடுத்துச்சொன்ன அத்தனை வழிமுறைகளையும் நாம் கடைபிடித்தாக வேண்டும். அதற்காக நாம் பல்வேறு திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். அதில் நமது கவனத்தைப் பெற்றிருக்கக்கூடிய முதன்மையான துறை எது என்று சொன்னால், அது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைதான்!

கல்வியும் - மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகத்தான துறையாகச் இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. மகத்தான வகையில் செயல்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும், துறையினுடைய செயலாளர் திரு. செந்தில்குமார் அவர்களையும், அவர்களுக்கு துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகளையும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். தமிழக அரசின் சார்பில் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதன் தொடர்ச்சியாக உங்களது பணிகளை மேலும் செம்மைப்படுத்தி மக்களுக்கு உதவத் திட்டமிடும் நோக்கத்தோடு இந்த மாநாட்டை நீங்கள் இங்கே கூட்டியிருக்கிறீர்கள்.

  •  ஆரம்ப சுகாதார நிலையங்கள்
  • நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்
  • வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் 

அரசு மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அரசினுடைய நோக்கத்தை முழுமைப்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஊரகப் பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள்!

இதைத்தான் திருவள்ளுவர் அவர்கள், "நோய் நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்று குறிப்பிடுகிறார். வள்ளுவர் வலியுறுத்திய குறிக்கோளுடன் நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். நமது அரசு செயல்பட்டு வருவதை

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக

  • கண்ணொளி காப்போம் திட்டம்,
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்,
  • வருமுன் காப்போம் திட்டம்,
  • கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,
  • 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம்

போன்ற எண்ணற்ற சுகாதாரத் திட்டங்கள் நாட்டில் முன்னோடித் திட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, இன்றளவும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் சிறப்பான செயல்பாட்டால் தேசிய அளவிலும், இதர மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கலைஞரின் பாதையில்தான் நமது அரசினுடைய நல்வாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் வாழும் இடங்களிலிலேயே மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடி நபர்கள் என்ற எண்ணிக்கையை அடைய இருக்கிறது.

சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்பைக் குறைப்பதற்கும், பொன்னான நேரம் (Golden Hour) என்று சொல்லப்படும் முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க ஒரு இலட்சம் ரூபாய் வரை இலவசமாக வழங்கப்படும் 'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48' திட்டம் 18.12.2021 முதல் செயல்படுத்தப்படுகிறது.

நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகைசெய்யக்கூடிய வகையிலே 'கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்' மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோதனை செய்திருக்கிறார்கள்.

இந்த மூன்று திட்டங்களும், நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இவற்றைச் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பயன்பெற நீங்கள் அனைவரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என தெரிவித்திருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில்பாலஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
Varshini Venkat: பிக்பாஸ் வீட்டை விட்டு போகும் போது காதலர்களுக்குள் பிரச்னையை கொளுத்தி போட்டு சென்ற பெண் போட்டியாளர்!
Varshini Venkat: பிக்பாஸ் வீட்டை விட்டு போகும் போது காதலர்களுக்குள் பிரச்னையை கொளுத்தி போட்டு சென்ற பெண் போட்டியாளர்!
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
Embed widget