One year of DMK Governance : "ஓராண்டில் கடல்போன்ற சாதனை" - ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
தமிழ்நாடு மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் பேசுகிறேன் என்றார் முதலமைச்சர்
துளிபோன்ற இந்த ஓராண்டில் கடல்போன்ற ஓராண்டு சாதனைகளை செய்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ”துளிபோன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் திமுக அரசு சாதனைகளை செய்துள்ளது. தமிழ்நாடு மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் பேசுகிறேன். திமுக அரசின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
என் வாழ்வில் மறக்க முடியாதது 29c பேருந்து, அந்த பேருந்தில்தான் பள்ளிக்கு சென்று வந்தேன். 29c பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது.
கொரோனா கால உதவித்தொகையான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற்றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்