மேலும் அறிய

கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

உயிரிழந்த மீனவர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிட உத்தரவு.

தமிழக கர்நாடகா மாநிலங்களில் எல்லையான மேட்டூர் அடுத்துள்ள பாலாறு என்ற வனப் பகுதியில் தமிழக மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14 ஆம் தேதி இரண்டு பரிசல்களில் மூன்று பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அதில் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் பாலாற்றின் வழியாக சென்றுள்ளனர். பரிசலில் சென்றவர்கள் ஊர் திரும்பிய நிலையில், கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஊர் திரும்பவில்லை. இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பாலாறு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தப்பி வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

இதற்கிடையே, கர்நாடகா மாநில வனத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கர்நாடகா வனப்பகுதியில் மான்களை வேட்டையாட வந்ததாகவும், அதனைக் கண்டு கர்நாடகா வனத்துறையினர் துப்பாக்கியை வான் நோக்கி மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கி சத்தம் கேட்டு வேட்டையாட வந்தவர்கள் ஓடி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து இரண்டு பரிசல், இரண்டு மான் இறைச்சி மற்றும் டார்ச் லைட்டை கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போன ராஜாவின் உடல் காவிரி ஆற்றில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் ராஜாவின் உடலை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தமிழகம் கர்நாடக எல்லையான பாலாறு வழியாக இரு மாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா வனத்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14.2.2023 அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Embed widget