மேலும் அறிய

24 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

’’அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’’

வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைப்பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்    பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

18.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

20.06.2022, 21.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

மீனவர்களுக்கான எச்சரிக்கை  

17.06.2022: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா,  குமரிக்கடல் பகுதி, இலட்சத்தீவு பகுதி   மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.

18.06.2022: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா,  குமரிக்கடல் பகுதி, இலட்சத்தீவு பகுதி   மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 

19.06.2022, 20.06.2022, 21.06.2022: குமரிக்கடல் பகுதி, கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள்,  இலட்சத்தீவு பகுதி   மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) 12, திருப்புவனம் (சிவகங்கை) 10, நத்தம் (திண்டுக்கல்) 9, சூளகிரி (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தருமபுரி), மாரண்டஹள்ளி (தருமபுரி), திருப்பூர் பொதுப்பணித்துறை (திருப்பூர்), நாகுடி (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (திருப்பத்தூர்) தலா 8, அறந்தாங்கி (புதுக்கோட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்), சிவகங்கை (சிவகங்கை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), குடுமியான்மலை (புதுக்கோட்டை), அரிமளம் (புதுக்கோட்டை), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) தலா 7, டேனிஷ்பேட்டை (சேலம்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), அரியலூர் (அரியலூர்), தளி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 6, ஒகேனக்கல் (தருமபுரி), சின்னக்களார் (கோயம்புத்தூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஈரோடு (ஈரோடு), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) தலா 5,  காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), விரகனூர் அணை (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை) தலா 4, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), ஓசூர் (கிருஷ்ணகிரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), செங்கம் (திருவண்ணாமலை), திண்டுக்கல் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி (தேனி), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), கோத்தகிரி (நீலகிரி), (புதுக்கோட்டை), ஏற்காடு (சேலம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), முசிறி (திருச்சி), திருப்பூர் (திருப்பூர்), கயத்தாறு (தூத்துக்குடி), பென்னாகரம் (தருமபுரி), பாலவிதிதி (கரூர்), மதுரை விமான நிலையம் (மதுரை), ஆத்தூர் (சேலம்) தலா 3. கடவூர் (கரூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), வேடசந்தூர் (திண்டுக்கல்), பெரம்பலூர் (பெரம்பலூர்), போடிநாயக்கனூர் (தேனி), அவிநாசி (திருப்பூர்), எருமப்பட்டி (நாமக்கல்), ஓமலூர் (சேலம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), மதுரை தெற்கு (மதுரை), சிவகாசி (விருதுநகர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி),  சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), மாயனூர் (கரூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), வாணியம்பாடி (திருப்பத்தூர்) தலா 2, மோகனூர் (நாமக்கல்), அரவக்குறிச்சி (கரூர்), சோலையார் (கோயம்புத்தூர்), தல்லாகுளம் (மதுரை), பவானிசாகர் (ஈரோடு), பேராவூரணி (தஞ்சாவூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), வீரபாண்டி (தேனி), வந்தவாசி (திருவண்ணாமலை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), சிவகிரி (தென்காசி), கூடலூர் பஜார் (நீலகிரி), கறம்பக்குடி (புதுக்கோட்டை), கல்லிக்குடி (மதுரை), அன்னூர் (கோயம்புத்தூர்), கரூர் (கரூர்), மணப்பாறை (திருச்சி), புள்ளம்பாடி (திருச்சி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பெருந்துறை (ஈரோடு), திருத்தணி PTO (திருவள்ளூர்), காங்கேயம் (திருப்பூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கூடலூர் (தேனி), பாரூர் (கிருஷ்ணகிரி), லால்குடி (திருச்சி), நடுவட்டம் (நீலகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பரமத்திவேலூர் (நாமக்கல்), குளித்தலை (கரூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 1.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்Sengottaiyan | டார்கெட் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனுக்கு support! அமித்ஷா பிரம்மாஸ்திரம்Prashant Kishor meets TVK Vijay | LEAK-ஆன ஆடியோ! ஸ்கெட்ச் போட்ட PK! ஜான் ஆரோக்கியசாமி OUT!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget