Chennai Weather: சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை தொடரும்; வானிலை மையம் அறிவிப்பு!- எங்கே?

சென்னையில் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2.30 மணி வரை பலத்த மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழக மக்களை வெயில் வாட்டி வந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக இன்று (ஏப்.16) காலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, சிந்தாதிரிப் பேட்டை, கோயம்பேடு, வளசரவாகம், கோடம்பாக்கம், போரூர், மதுரவாயல், நெற்குன்றம், கலைஞர் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணாநகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, ஆயிரம் விளக்கு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
அதேபோல் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், பெரிய பாளையம், கும்மிடிப்பூண்டி, கொளத்தூர், ரெட்டேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சாரல் மழை
தற்போதும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பிற்பகல் 2.30 மணி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பிற்பகல் 2.30 மணி வரை பலத்த மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மித மழைக்கு வாய்ப்பு?
மேலும் இன்று ராணிப்பேட்டை விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, ராமநாதம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 செ.மீ. மழை
சென்னையில் சராசரியாக 2 செ.மீ. மழை பெய்துள்ளது. சாலிகிராமம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்"
