இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “நெடுஞ்சாலைத் துறையால் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிச்சாலைக்கான மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இன்று முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு சேமியர்ஸ் சாலை வழியாக நந்தனம் சந்திப்புக்கு செல்லலாம். அதன்பின்னர் அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “சைதாப்பேட்டையில் இருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதில் அண்ணாசாலை, செனடாப் சாலை வழியாக சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
ஜிகே மூப்பனார் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்” என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

