மேலும் அறிய

Chennai Nellai Vande Bharat: பஸ் டிக்கெட்டை விட கம்மி! சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை இவ்வளவுதானா?

Chennai to Nellai Vande Bharat Train Ticket Price: சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.

Chennai Nellai Vande Bharat: தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.

வந்தே பாரத் ரயில்:

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 

நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அதனால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது.

சென்னை டூ நெல்லை:

இந்நிலையில், தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் இருந்து திருச்சி, விருதுநகர் வழியாக திருநெல்வேலி வந்தடைந்தது. வந்தே பாரத் ரயிலை கண்டதும் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.  இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைகிறது.  மறுமார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

இந்த ரயில், சென்னை எழும்பூருக்கு அடுத்தபடியாக 160 கி.மீ தூரம் தள்ளி உள்ள விழுப்புரத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 160 கி.மீ தூரமுள்ள திருச்சியிலும் தான் நிற்கும். அதேபோல, அதற்கு அடுத்து 105 கி.மீ தூரமுள்ள திண்டுக்கல், மதுரை மற்றும்  விருதுநகரில் நிற்கும். ஒரே நாளில் நெல்லை, சென்னை இடையே பேருந்தில் சென்றடைய முடியாது.  சென்னை டூ நெல்லை சென்றடைய 10 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் ஏழு அரை மணி நேரத்தில் செல்வதால் இதற்கு மிகப் பெரிய வரவேற்பு நிச்சயம் இருக்கும்.

கட்டண விவரம்:

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட மக்களுக்கு இருந்து வந்தது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலில் ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய். இந்த பெட்டியில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். அதனால் இவற்றின் கட்டணம் அதிகமாகும். மேலும், இந்த ரயிலில் பயணிகளுக்கு 2 வேளை உணவு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவு உணவுடன் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். இந்த ரயில் பேண்ட்ரி கார் வசதி  இல்லை என்றாலும் ஐஆர்சிடிசி மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

Chennai Nellai Vande Bharat: பஸ் டிக்கெட்டை விட கம்மி! சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை இவ்வளவுதானா?

டிக்கெட் முன்பதிவு செய்யும்போதை பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்படும். உணவிற்கும் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget