TVK 1st Anniversary LIVE: தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
Vijay TVK 1st Anniversary LIVE: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டத்திற்குப் பிறகு நடிகர் விஜய் பங்கேற்கும் அரசியல் நிகழ்வு என்பதாலும், தவெக-வின் முதல் அரசியல் மாநாட்டிற்குப் பிறகும் விஜய் தனது கட்சியினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பங்கேற்கும் நிகழ்வு என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்க்கில் நேரலையாக காணலாம்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்ப்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் வன்காெடுமை குற்றங்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் மும்மொழி கொள்கை விவகாரம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















