’கி.ரா. அய்யாவிற்கு ஞானபீடம் வழங்கப்படவில்லையே’ - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., உருக்கம்

இடைசெவலுக்குப் பிரதான சாலையிலிருந்துப் பிரிந்து செல்கின்ற பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டுமென்று பல ஆண்டுகளுக்கு முன் என்னிடத்தில் சொன்னார். இன்று கரிசல் இலக்கியத்தின், இளைய படைப்பாளிகள் பலரை ஏற்றிச் சென்ற அந்தப் பெருமைமிகு பேருந்து அங்கேயே நிலை கொண்டுவிட்டது. - தமிழச்சி எம்.பி.

FOLLOW US: 

சாகித்ய அகாடெமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது 99 வயதில் இன்று மறைந்தார். அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் எனப் பரவலாக அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கி.ரா. பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதில், 

View this post on Instagram

A post shared by Thamizhachi Thangapandian (@__thamizhachi__)
'அண்டரண்டப் பட்சி’ பறந்து விட்டது.‘கோபல்லபுரம்’ தன் ஆலமரத்தை இழந்துவிட்டது.
கரிசல், தன் ஆணிவேர்க் கதைசொல்லியைக் களவு கொடுத்து விட்டது மரணத்திடம்!
கரிசக்காட்டு சம்சாரிகளின் வெள்ளந்தி மனசை, பாரிய உழைப்பை, பேச்சுமொழியின் ருசியை, வட்டார வழக்கின் வண்ணங்களை,
தத்துவங்களைச் சவாலுக்கழைக்கும் சொலவடைகளை, காலம் கரைக்க இயலாத நாட்டுப்புறக் கதைகளை உயிர்ப்புடன் உலக இலக்கிய வரிசையில் உட்கார வைத்த, முன்னத்தி ஏர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.
பிறந்த இடைசெவலை, தான் இளைப்பாறிய பாண்டிச்சேரியில் எள்ளளவும் மறந்தாரில்லை.
பெருவாழ்வு தான்- நிறைவாழ்வு தான்!
ஆனாலும் ‘பக்கென்று’ சேதி கேட்டதிலிருந்து நின்ற மனம் ஆறவில்லை.
அவரது ஒவ்வொரு படைப்பையும் ஆராதித்துப் பேசிய, எழுதிய பொழுதுகள்… அய்யாவுடனும், கணவதி அம்மாவுடனும் கழித்த உரையாடல் கணங்கள்… அவை எல்லாவற்றிலும் மண்ணின் கதை ஒன்றைப் போகிற போக்கில் கோர்த்து விடும் அய்யாவின் சொல் வளமை, அவரது இசைப் புலமை… உதடு புரியாமல் சிரிக்கவைக்கும் கரிசலுக்கே உரித்தான நக்கல் .. என நினைவுத் தறியில் ஊடுபாவுகிறேன்.
எஸ் பொ அய்யா, அவருக்காகவே என் புத்தக வெளியீடுகளைப் பாண்டிச்சேரியில் வைப்பதுண்டு.
‘கி.ரா 90’ நிகழ்வில் அனைவரும் கூடி உணவருந்துகையில் அவர் பக்கம் அமர்ந்து ரசித்து உணவுண்டதும், ‘சிறுகதைப் பக்கம் வந்தாச்சு போல’ எனக் கேட்டபடி வாழ்த்தியதும் என் வாழ்வின் கொடுப்பினைகள்.
அய்யாவிற்கு ‘ ஞானபீடம்’ வழங்கப்படவில்லையே எனும் ஆதங்கம் இக்கணம் அதீத வருத்தமுடன் கூடுதலாக எழுகிறது.
அய்யாவைக் கடைசியாக, கணவதி அம்மா மறைந்த சிலநாட்களில் சந்தித்தேன்.தம்பி பிரபாவிடம் ஞாபகமா கம்மங்கூழும் சின்ன வெங்காயமும் தந்து என்னை உபசரிக்கச் செய்தார்.
தன் கையெழுத்தில் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்த, புதினத்தைக் காண்பித்தார்.
தீரா ருசியுடன் படைப்புக் கொண்டாடும் அந்தக் கண்களில் முதுமை ஏது?
இடைசெவலுக்குப் பிரதான சாலையிலிருந்துப் பிரிந்து செல்கின்ற பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டுமென்று பல ஆண்டுகளுக்கு முன் என்னிடத்தில் சொன்னார்.
இன்று கரிசல் இலக்கியத்தின், இளைய படைப்பாளிகள் பலரை ஏற்றிச் சென்ற அந்தப் பெருமைமிகு பேருந்து அங்கேயே நிலை கொண்டு விட்டது.

தமிழ் இலக்கியத்தின் கரிசல் பிதாமகர், இடைசெவலில் அரசு மரியாதையுடன் நீள்துயில்கொள்வார் என அறிவித்திருக்கின்ற மாண்புமகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி' எங்கள் பிதாமகருக்குப் புகழ் வணக்கம்' எனக் குறிப்பிட்டுள்ளார். ம்றைந்த கி.ரா. உடல் அரசு மரியாதையுடன் இறுதியாக வழியனுப்பிவைக்கப்பட்டது. 

Tags: death literature ki.rajanarayanan sahitya akademi tamil literature thamizhachi thangapandian ki.ra.

தொடர்புடைய செய்திகள்

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

சுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

சுஷில் ஹரி பள்ளியிலிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார்..!

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

சசிகலாவுடன் பேசும் அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

Meera mithun | ''தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.. காரணம் இவர்தான்” : முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதிய மீரா மிதுன்!

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Naira Shah Arrested |காதலருடன் போதைப் பார்ட்டி : தமிழ் நடிகை கைது!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!