மேலும் அறிய

Chennai Rains: கடந்த 35 ஆண்டுகளில் சென்னையில் எப்போதெல்லாம் கொட்டித்தீர்த்தது தெரியுமா? முழு டேட்டா இதோ!

கடந்த 35 ஆண்டுகளில் சென்னை மாநகரில் 200 மி.மீ மழை எப்போதெல்லாம் பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

கடந்த 35 ஆண்டுகளில் சென்னை மாநகரில் 200 மி.மீ மழை எப்போதெல்லாம் பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நேற்று திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால், மாநகர் முழுதும் முடங்கியது. தெருக்கள் பல மழை நீரில் மூழ்ந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின் வினியோகம் பாதித்தது. இப்படி பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க, முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியாகாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று திருச்சியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், உடனே சென்னை திரும்பினார். நள்ளிரவில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை அப்பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டார்.

மேலும், கனமழை பாதிப்பு காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Chennai Rains: கடந்த 35 ஆண்டுகளில் சென்னையில் எப்போதெல்லாம் கொட்டித்தீர்த்தது தெரியுமா? முழு டேட்டா இதோ!

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பேய் மழை பெய்திருக்கிறது. திருச்சியில் இருந்ததும், நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினேன். நீரை வெளியேற்றும் பணிகள் இன்று முடிந்துவிடும். வானிலை அறிக்கை பெறுவதில் இயந்திரங்கள் மாற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை. மீண்டும் அதை நினைவூட்டுகிறேன். மீண்டும் தேங்கிய இடத்திலேயே மழை நீர் தேங்க காரணம், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்த மழை வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம்” என்றார். 

இதனிடையே வழக்கமாக தமிழ்நாட்டில் 9 சதவீதம் மழை, டிசம்பர் மாதத்தில் பெய்யும். ஆனால் ,இம்முறை 6 சதவீதம் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. ஆனால், நவம்பரில் அதிக மழை கொட்டியுள்ளது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் சென்னையில் 100 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

2015 ம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் சென்னை மாநகரான நுங்கம்பாக்கத்தில் 200 மி.மீ மழை எப்போதெல்லாம் பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மட்டும் இரண்டு 200 மி.மீ மழை நிகழ்வுகளை சந்தித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 200 ஆண்டுகளில் சென்னையில் 24 மணி நேர மழையில் 200 மி.மீ மழை பதிவான நாட்களை பட்டியலிட்டுள்ளார். அதன்படி 

21st October 1840 - 550 (மில்லி மீட்டரில்)

24th October 1857 - 400

25th November 1970 - 452

14th June 1990 - 348

13th November 1985 - 329

2nd December 2015 - 294

17th February 1904 - 294

22 October 1969 - 280

27 October 2005 - 273

10th December 1901 - 262

12th November 1005 - 249

10th November 2016 - 247

13 November 1984 - 240

22nd May 1952 - 244

16 November 1922 - 236

3 December 2005 - 234

25 October 1902 - 233

7 November 2021 - 215

17 May 1943 - 215

26 December 1978 - 203

31 December 2021 - 201

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
Embed widget