Weatherman Pradeep John | "இதையெல்லாம் எப்படி ப்ரஸ் மீட்ல சொல்றாங்க.." வானிலை மையத்தை விமர்சிக்கும் வெதர்மேன்
தரவு பொய் இல்லை. இதை எப்படி வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்ல முடியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பெய்த மழையானது 100 செ.மீ., மழையளவைத் தாண்டவில்லை என்று வானிலை மையம் கூறிய நிலையில், அதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பரபரப்பான கருத்தை ஒன்றை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் 100 செ.மீ மழை தாண்டவில்லை என்று ஐ.எம்.டி கூறும்போது, சிரபுஞ்சி அல்லது மவ்சின்ராம் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது. ஏனெனில் கிழக்கு காசி மலை மாவட்டத்தின் சராசரி 10000 மிமீ இல்லை என்பதால், சிரபுஞ்சி, மவ்சின்ராம் பகுதியும் அப்படியானது இல்லை என சொல்வதுபோல் உள்ளது. தரவுகள் பொய் சொல்லாது. இதை எப்படி வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்ல முடியும்’ என்று பதிவிட்டுள்ளார்.
When IMD says 100 cm not crossed for Chennai, is like saying Cherrapunji or Mawsynram is not the wettest place in the world because the district East Khasi hills district they belong dont have average of 10000 mm.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 29, 2021
Data dont lie. How can they can tell these in a open press meet.
முன்னதாக, தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் கனமழை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ.,அளவை கடப்பது இது 4-வது முறையாகவும், கடந்த 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மி.மீ.,அளவை கடப்பது 3வது முறையாகவும் பதிவாகியுள்ளது. 1088 mm - நவம்பர் 1918
1078 mm - அக்டோபர் 2005
1049 mm - நவம்பர் 2015
1003 mm - நவம்பர் 2021 (27 நவம்பர் - 7.30 pm நிலவரப்படி) இது தான் இந்த ஆண்டுக்கான தீவிர கனமழையின் நிலை என்றும் கூறியிருந்தார்.
Chennai records 1000 mm in a month for 4th time for any month and 3rd time in November in 200 years. Shows the intensity of rains this year.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 27, 2021
1088 mm - November 1918
1078 mm - October 2005
1049 mm - November 2015
1003 mm - November 2021 (till 27 Nov - 7.30 pm)
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்