Chennai Metro: மூன்றே வருடம்..! சென்னையின் போக்குவரத்து ஹப் கத்திப்பாரா சந்திப்பு, 3வது அடுக்கில் வளைந்து பறக்கும் மெட்ரோ ரயில்
Chennai Metro Kathipara: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும்போது, கத்திப்பாரா சந்திப்பு பெரும் மாற்றத்தை காண உள்ளது.

Chennai Metro Kathipara: கத்திப்பாரா சந்திப்பிற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ பணிகள் பரபரப்பு
சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே போக்குவரத்து, இடநெருக்கடி, மாசு மற்றும் புழுதி போன்ற பிரச்னைகள் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதை அனைத்தையும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேலும் அதிகரித்து கொண்டிருப்பதாகவே பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இருப்பினும், “சிறப்பான நாளைக்காக, இன்றைய இடையூறு” என்ற மெட்ரோ நிர்வாகத்தின் வாசகத்தை சென்னை மக்கள் நம்பி தங்களது அன்றாட பிரச்னைகளுக்கு மத்தியில் மெட்ரொ திட்டப் பணிகளால் ஏற்படும் இடையூறுகளையும் தாங்கி வருகின்றனர். அதற்கேற்ப இரண்டாம் கட்ட பணிகளும் முடுக்கிவிடப்பட்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கத்திப்பாரா சந்திப்பிற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளில் மாறப்போகும் கத்திப்பாரா சந்திப்பு - கிராபிக்ஸ் காட்சிகள்#CMRL #Kathipara #ChennaiMetro #GraphicsVideo pic.twitter.com/DYDBwiUM6N
— ABP Nadu (@abpnadu) February 12, 2025
கத்திப்பாரா மீது 3வது வழித்தடம்:
மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ளும் எல்&டி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், அடுத்த மூன்று ஆண்டுகளில் கத்திப்பாரா சந்திப்பு எப்படி மாற்றம் காண உள்ளது என கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின்படி, கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது 3வது மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய உள்ளது. ஏற்கனவே சென்னை விமான நிலையம் டூ சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் டூ விம்கோ நகர் என இரண்டு பாதைகளுக்கான வழித்தடங்கள், கத்திப்பார மேம்பாலத்தின் மீது அமைந்துள்ளது. இந்நிலையில் தான், அந்த மேம்பாலத்திற்கு மேற்பகுதியில் மெட்ரோ ரயில் வளைந்து செல்லும் விதமாக மூன்றாவது வழித்தடம் அமைக்கப்பட இருப்பதை அந்த கிராஃபிக்ஸ் காட்சிகள் காட்டுகின்றன.
உயரமான தூண்:
ஏற்கனவே அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாவது வழித்தடத்திற்கு மேலே, 30 மீட்டர் உயரத்தில் மூன்றாவது வழித்தடம் அமைய உள்ளது. இது பொறியியல் கட்டுமான ரீதியில் மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்படுகிறது. கீழே மக்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலை உள்ள நிலையில், மேலே சென்னையின் மிக உயரமான மெட்ரோ தூண் அமைக்கப்பட இருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
3வது வழித்தடத்தின் விவரங்கள்:
போரூரில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட்-யை இணைக்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக தான் இவ்வளவு பெரிய தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. போரூரில் இருந்து வரும் வழித்தடம் கத்திப்பாரா பாலத்தில் 400 மீட்டர் அளவிற்கு செல்கிறது. 120 மீட்டர் வளைவு கோணத்தில் பாலம் அமைய உள்ளதால் மெட்ரோ ரயில் இயக்கும்போது பாதுகாப்பு கருவி புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பேலன்ஸ் கான்டிலீவர்' என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் காண்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது. திட்டம் முடியும் போது கத்திப்பாரா பாலத்தில் வாகனங்கள் செல்லும் நிலையில், அதற்கு மேலே 18 மீட்டர் 25 மீட்டர் 30 மீட்டர் என்கிற உயரத்தில் மெட்ரோ ரயில்களும் செல்ல உள்ளன.
மாறப்போகும் கத்திப்பாரா சந்திப்பு
ஏற்கனவே ஆலந்தூர் மெட்ரோ முக்கியமானதாக விளங்கும் நிலையில், அதோடு மூன்றாவது வழித்தடமும் இணைய உள்ளது. செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் மூன்று மெட்ரோ வழித்தடங்கள் வேளச்சேரியில் இருந்து வரும் ஒரு புறநகர் பறக்கும் ரயில் தடம், அதற்கும் கீழே சென்னை மாநகரப் பேருந்து நிற்கும் பேருந்து நிலையம் என இன்னும் மூன்று வருடங்களில் அந்தப் பகுதியே சென்னையின் முக்கிய போக்குவரத்து திடலாக மாற உள்ளது....
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

