CMRL JOB ; சென்னை மெட்ரோவில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்! நேர்முகத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு.

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ (Chennai Metro)
சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன. மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெற்றோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம்.
மேற்பார்வையாளர் Supervisor (Operations)
கல்வித் தகுதி: Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.
Supervisor (Maintenance)
கல்வித் தகுதி:
- Diploma in Civil Engineering/ Electrical / Electronics, Computer Engg.,
- Information Technology,
- Electronics & Communications
- Electronics & Communications Industry Integrated,
- Electrical & Electronics,
- Electronics / Microprocessor,
- Electronics & Telecommunications,
- Instrumentation Technology,
- Electronics and Instrumentation Engg./ Mechanical படித்திருக்க வேண்டும்.
முக்கிய விவரங்கள்
சம்பளம்: இந்தப் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 33 வயது வரை இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு விவரங்கள்
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள மையங்களில் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்:
- 04.11.2025
- 05.11.2025
- 10.11.2025
- 13.11.2025
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
நேர்முகத் தேர்வு சென்னை மதுரை கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை:
Govt. Industrial Training Institute, Labour Colony, SIDCO Industrial Estate, Guindy, Chennai - 600032
கேவை:
Govt. Industrial Training Institute, Mettupalayam Road, GN Mills Post, Coimbatore - 641029
மதுரை:
Govt. Industrial Training Institute, Industrial Estate, K. Pudur, Madurai - 625007.





















