Chennai: முறைகேடாக சம்பாதித்த தனியரசு - சகோதரர் போலீசில் புகார்
கடந்த முறை எம்எல்ஏவாக இருந்ததால் ஆளுங்கட்சி பலத்தோடு தொடர்ந்து மிரட்டினார். இப்பொழுது புதிய ஆட்சி சிறப்பாக செயல்படுவதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு கடந்த பத்து வருடத்தில் 80 கோடி ரூபாய் சொத்துக்களை முறைகேடாக சம்பாதித்தாக தனியரசுவின் சகோதரர் நல்லரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மைலாப்பூர் சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில்
நல்லரசு புகார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “கடந்த பத்து வருடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனியரசு முறைகேடாக 10 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் சேர்த்துள்ளார். மேலும், பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள என்னுடைய சொத்தை ஏமாற்றினார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டால், என்னை அடியாட்கள் வைத்து மிரட்டினார். இரண்டு முறை கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த முறை எம்எல்ஏவாக இருந்ததால் ஆளுங்கட்சி பலத்தோடு தொடர்ந்து மிரட்டினார். இப்பொழுது புதிய ஆட்சி சிறப்பாக செயல்படுவதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறை தலைவர் அலுவலகத்தில் தனியரசு மீது புகார் கொடுக்க வந்துள்ளேன். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை அடுத்து நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர உள்ளேன்” என கூறினார்.
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு தொகுதியில் போட்டியிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அப்போது பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தனியரசு முதல்முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார். இதன்பின்னர், 2016 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அதிமுகவும் கூட்டணி அமைத்து காங்கேயம் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
MK Stalin | விவசாயிகளுடன் ஒரு நாள் - எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!