மேலும் அறிய
Advertisement
AIADMK Office Sealed: அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல்; அகற்றக் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் முறையீடு
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை ஓபிஎஸ் சென்றார். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கினர்.
அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இதே பிரச்னை தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.
அதேபோல, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டாதகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் நடத்து கொண்டதாக கூறி யூட்டுபரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன் மீது நான்கு வழக்குகள் காவல்துறை பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரை முருகனின் மனைவி மாதரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அரசியல் காரணங்களுக்காக தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும். மேலும் குண்டர் சட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு மீது உரிய காலத்திற்குள் பரிசீலிக்கவில்லை. எனவே எனது கணவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சாட்டை துரைமுருகனுக்கு பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரிய மனு மீது பரிசீலிக்க அரசு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால். துரைமுருகனுக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பேச்சுரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கி உள்ள அடிப்படை உரிமை எனவும் ஆனால் அதற்கும் ஓர் எல்லை உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், மனுதரார் கணவர் துரைமுருகன் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion