மேலும் அறிய

Rain Alert : அடுத்த 3 மணிநேரம்.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தாக்க காத்திருக்கும் மழை.. எங்கெங்கு..?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

"மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

02.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

ஊத்து (திருநெல்வேலி) 11, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 10, சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 9, குண்டாறு அணை (தென்காசி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 8, சின்கோனா (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7, சோலையார் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி) வால்பாறை PTO (கோயம்புத்தூர்)  தலா 6, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சுரளகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
01.10.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

02.10.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

01.10.2023:  மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு  வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02.10.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.10.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:  

01.10.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகசாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
நாளை கூடுகிறது சட்டசபை.! பிளான் போடும் அதிமுக, பாஜக - எதிர்த்து அடிக்க தயாராகும் திமுக
நாளை கூடுகிறது சட்டசபை.! பிளான் போடும் அதிமுக, பாஜக - எதிர்த்து அடிக்க தயாராகும் திமுக
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Embed widget