தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், நெல்லை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தருமபுரி, கரூர், பெரம்பலூர், மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
அமராவதி அணை (திருப்பூர்) 3,சூலூர் (கோயம்புத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) தலா 2, கிளென்மோர்கன் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பல்லடம் (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), கெட்டி (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம், சின்கோனா (கோயம்புத்தூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி), பழனி (திண்டுக்கல்), கங்கவல்லி (சேலம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்) தலா 1.