மேலும் அறிய

TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்பநிலை அலையும் உண்டு - வானிலை அப்டேட்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 7)தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 மற்றும் 09.04.2024:    தென் தமிழக மாவட்டங்கள்,    வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

10.04.2024 மற்றும் 11.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

12.04.2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

13.04.2024 : தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

இன்று (ஏப்ரல் 7) முதல் வரும் 11ஆம் தேதி வரை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று  தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

07.04.2024:
அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில  இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.

அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°–37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

08.04.2024 முதல் 11.04.2024 வரை: அதிகபட்ச  வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில்  2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 

07.04.2024 முதல் 11.04.2024 வரை:
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 

இன்று (ஏப்ரல் 7) -அடுத்த 24 மணி நேரத்திற்கு வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
Breaking News LIVE: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
ICC T20 Wolrd Cup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய தென்னாப்ரிக்கா..! 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மேஷத்துக்கு ஆர்வமின்மை, ரிஷபத்துக்கு வெற்றி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ
குற்றவாளி வாக்குமூலம்.. காஞ்சிபுரம் கோயில் அருகே கஞ்சா விற்பனை ஜோர், அதிர்ச்சியில் போலீஸ்
குற்றவாளி வாக்குமூலம்.. காஞ்சிபுரம் கோயில் அருகே கஞ்சா விற்பனை ஜோர், அதிர்ச்சியில் போலீஸ்
Watch Video : முருகனுக்கே பஞ்சாயத்து.. எல்லாம் தெரிஞ்சுபோச்சு.. போறேன்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..
Watch Video : முருகனுக்கே பஞ்சாயத்து.. போறேன்.. ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்..
Embed widget