MGNREGA Fund Release: நாங்க கேட்டது ஒன்னு ! ஆனா அவங்க கொடுத்தது.. 100 நாள் வேலை திட்டம் நிதி... மீண்டும் தமிழ்நாடு அரசிடம் கை விரித்த மத்திய அரசு?
MGNREGS Fund Release: 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்த வந்த நிலையில் தற்போது அதற்கான நிதியை வெளியிட்டுப் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருந்த வந்த நிலையில் தற்போது அதற்கான நிதியை வெளியிட்டுப் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலுக்கு வந்தது, நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் வறுமையை ஒழிக்க இந்த திட்டமானது செயல்ப்படுத்தப்பட்டுள்ளது.
கூலி எவ்வளவு?
இந்த 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் கூலியாக ரூ-50ல் தொடங்கி தற்போது 374ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது, இந்த சம்பள தொகையானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும், தமிழ்நாட்டில் ஒருவருக்கு தற்சமயம் ஊதியமாக ரூ 314 கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ 31,900 ஊதியமாக கிடைக்கிறதும்.
ஊதிய உயர்வு அறிவிப்பு:
கடந்த மாதம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ், 2025-26 நிதியாண்டிற்கான ஊதியத்தை 2-7% வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கிராமப்புற வேலை உறுதித் திட்டங்களை நடத்துவதற்கான முதன்மை அமைச்சகமான ஊரக மேம்பாட்டு அமைச்சகம் (MoRD), 2025-26 நிதியாண்டுக்கான NREGS ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது. அதன்படி, 2025-26 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதிய விகிதங்கள் 2.33-7.48% வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்ந்துள்ளது.
காற்றில்விடப்பட்ட திட்டம்:
இந்த திட்டமானது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தப்போது கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் பாஜக அரசு இந்த திட்டத்தால் விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி இந்த திட்டத்தை போதிய கவனம் அளிக்கப்படுவதில்லை.
பணம் நிறுத்தி வைப்பு:
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டில் இது வரை 100 நாள் வேலை திட்டத்துக்காக கொடுக்க வேண்டிய நிதியான ரூ 3500 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தங்களுக்கான சம்பளம் கிடைக்காததை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன, இந்த திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி ஆகியோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இது குறித்து பேசினர்.
பணம் விடுவிப்பு:
இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு,100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது.






















