மேலும் அறிய

Paddy Procurement: நெல் கொள்முதல் பருவத்தை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு ஒப்புதல் : அமைச்சர் சக்கரபாணி

2022-23ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டு வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மே மாதம் 24 ஆம் நாளன்றே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டார்கள்.

தண்ணீர் திறந்த விட்டதோடு நில்லாமல் குறுவை நெல் சாகுபடியும் அறுவடையும் முன்பாகவே தொடங்கிவிடும் என்பதால் 2022 23 ஆம் காரிஃப் சந்தைப் பருவக் கொள்முதலை 1.10.2022 அன்று தொடங்குவதற்குப் பதிலாக 1.9.2022 அன்றே ஆரம்பித்திடவும் அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 2022 23 ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.06.2022 அன்று கடிதம் எழுதினார்கள்.

மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, ஒன்றிய அரசின் மாண்புமிகு வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. பியுஸ் கோயல் அவர்களை நானும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளரும் கோயம்புத்தூரில் 25.06.2022 அன்று நேரில் சந்தித்து முதலமைச்சர் பிரதமருக்கு எழுதிய கடித நகலைக் கொடுத்து 1.09.2022 அன்று நெல் கொள்முதலைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

புதுதில்லியில் 05.07.2022 நடந்த மாநில உணவு அமைச்சர்கள் மாநாட்டின் போதும் ஒன்றிய அமைச்சரிடம் இது பற்றி நானும், துறையின் முதன்மைச் செயலரும் நினைவூட்டினோம்.

மேலும், குறுவைப் பருவ நெல் கொள்முதல் தொடர்பாக காவிரிப்பாசன மாவட்ட விவசாயிகளின் ஆலோசனைகளைக் கேட்டிடவும் நெல் கொள்முதலுக்கான ஆயத்தப்பணிகளை உடனே மேற்கொண்டிடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 12.07.2022 மற்றும் 13.07.2022 ஆகிய இரு நாள்களில் மக்கள் பிரதிநிதிகளையும் விவசாயிகள் பிரதிநிதிகளையும் சந்தித்து ஆலோசித்ததோடு தொடர்புடைய அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினோம்.

அதனடிப்படையில் நெல் கொள்முதலுக்குத் தேவையான பணியாளர்கள் தேர்வு. கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்புக்கான இடங்கள், கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றிற்கான திட்டமிடல் தொடர்பான அறிவுரைகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக 1.09.2022 அன்றே தொடங்கி நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கிய ஒன்றிய அரசின் கடிதம் இன்று (19.07.2022) கிடைக்கப்பெற்றது. இதனால் 1.09.2022 அன்றிலிருந்தே நெல் கொள்முதல் செய்வதற்கான பணிகளைத் தொடங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

1.09.2022 அன்றே 2022 - 23 பருவ நெல் கொள்முதலைத் தொடங்க பிரதமருக்கு கடிதம் எழுதிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் அனுமதி வழங்கிய மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் மாண்புமிகு ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனால் 1.09.2022 அன்று முதல் கொள்முதல் செய்யப்படும் பொதுரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு சன்ன ரகத்திற்கு 2160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget