CCTV Cameras in Spa: “ஸ்பா, மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமாரா பொருத்தலாம்... ஆனால்..” - நீதிபதி உத்தரவு
ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது.
ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக் க்ராஸ் ஸ்பா செண்டர் எனும் பெயரில் ஸ்பா நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், மனுதாரர் ஸ்பா தொடங்குவதற்காக தடையில்லா சான்று வழங்கவும், அதற்கு தடையில்லா சான்று வழங்கவும் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்பா தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான சரியான விதிகள் ஏதுமில்லை. ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “ஸ்பா, மசாஜ் சென்டர்கள், தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அது இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். மசாஜ் சென்டர்கள் தங்களது பணியை வெளிப்படைத்தன்மையுடன், சட்டவிரோத செயல்களுக்கு இடம் கொடுக்காமல் நடத்தவேண்டும். சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டுள்ளார்.
ஸ்பா, மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்களை வைப்பது, அவர்களது உடலை பதிவுசெய்யும் விதமாக, தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையும். இது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது. நபர்கள் உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம். இந்த விவகாரங்களில் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்