CBI Raid : கார்த்தி சிதம்பரம் எம்.பி., தொடர்பான 7 இடங்களில் சிபிஐ சோதனை.. காரணம் என்ன..?
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Central Bureau of Investigation is conducting searches at multiple locations (residence and office) of Congress leader Karti Chidambaram, in connection with an ongoing case, says his office to ANI.
— ANI (@ANI) May 17, 2022
(file pic) pic.twitter.com/YPzcVLUTo6
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
#BREAKING | ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!https://t.co/wupaoCQKa2 | #PChidambaram #CBIRaid #chidambaram #karthichidambaram pic.twitter.com/VSEMKjopc4
— ABP Nadu (@abpnadu) May 17, 2022
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்திக் சிதம்பரம் அலுவலகத்தில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, 7 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தநிலையில், 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆதாரங்களின் படி, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சட்டவிரோதமாக செயல்பட்டதாக விசாரணை கமிட்டி இவர் மீது புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. 2010-14 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பஞ்சாபில் ஒரு மின் திட்டத்திற்காக 250 சீன பயனர்களின் விசாவை எளிதாக்குவதற்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது தந்தை ப சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியது உட்பட பல வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
2019 ஆம் ஆண்டு ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் சிதம்பரம் அவரது இல்லத்தில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்