ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உள்ளிட்ட 250 பேர் மீது வழக்கு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க இரண்டு வார முழு ஊரடங்கு இன்றிலிருந்து அமலுக்கு வந்திருக்கும் நிலையில் ஊரடங்குத் தடையை மீறி அதிமுகவினர் கூட்டம் நடத்தியாகப் புகார் எழுப்பப்பட்டது.
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் உள்ளிட்ட 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தியதாக புகார். அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தின் முடிவில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு இன்றிலிருந்து அமலுக்கு வந்திருக்கும் நிலையில் ஊரடங்குத் தடையை மீறி அதிமுகவினர் கூட்டம் நடத்தியாகப் புகார் எழுப்பப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.