மேலும் அறிய

Ramanathapuram Collector: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை தள்ளிவிட்ட விவகாரம் - திமுக எம்.பியின் உதவியாளர் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் திமுக கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் ஆதராவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே நிகழ்ச்சி தொடங்கியது தொடர்பாக அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் நவாஸ் கனி கேள்வி எழுப்பினார். இதனால் இருதரப்பினரையும்  சமாதானப்படுத்த முயற்சித்த ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.  இது பெரும் சர்ச்சையான நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் பங்கேற்றனர். விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் - எம்.பி. மோதல்:

பரிசளிப்பு விழாவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வந்த பிறகும் நீண்ட நேரமாகியும் மக்களவை உறுப்பினரான நவாஸ் கனி வரவில்லை என்று கூறப்படுகிறது. தாமதம் ஆன காரணத்தால் விழாவை தொடங்குமாறு ராஜகண்ணப்பன் கூறியதாக கூறப்படுகிறது. விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நிகழ்ச்சிக்கு நவாஸ் கனி எம்.பி. வந்தார். தான் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் இதுதொடர்பாக நவாஸ் கனி எம்.பி. மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டார். அப்போது, அவர் அருகில் நின்ற அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் – நவாஸ் கனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தள்ளிவிடப்பட்ட மாவட்ட ஆட்சியர்:

அமைச்சருடன் எம்.பி. நவாஸ்கனி வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் நவாஸ்கனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நவாஸ் கனி ஆதரவாளர்களும் அமைச்சரின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவின்போது இருதரப்பினரையும் சமாதனப்படுத்த முயற்சித்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளி விட்டனர்.

இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அமைச்சர் மற்றும் எம்.பி.யின் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அமைச்சர் ராஜகண்ணப்பன் – நவாஸ் கனி வாக்குவாதத்தின்போது மாவட்ட ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதைதொடர்ந்து தற்போது, நவாஸ் கனியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget