BREAKING: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை!
பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இப்பகுதியை பின்தொடரவும்
LIVE
Background
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை.
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை.
பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் இருக்காது
பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் ஆன நிலையில், அவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் மதிப்பெண் குறிப்பிடப்பட்டிருக்காது. மாறாக பத்தாம் வகுப்பு சான்றிதழில் ஆல் பாஸ் என்று அச்சிடப்பட்டிருக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறந்தன; உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்!
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், காலையில் டீ கடைகள் மற்றும் சலூன்கள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவித்த படி காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் ஆர்வமுடன் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். சூடம் ஏற்றியும், மலர் தூவியும் சில இடங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெல்டா பாசனத்திற்காக ஜூன் 16ல் கல்லணை திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 16ல் கல்லணை திறக்கப்பட உள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் கல்லணை திறக்கப்பட உள்ளது.
சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி
சிவசங்கர் பாபா பாலியல் விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது போக்சோ உட்பட மூன்று பிரிவுகளில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறை யினர் வழக்கு பதிந்த நிலையில் இந்த வழக்கானது நேற்று CBCID க்கு மாற்றபட்டது. விசாரணை அதிகாரிகளாக DSP குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.