IAS Officers Transfer: மாவட்ட ஆட்சியர்கள் மாற்றத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசு; யார் யாருக்கு என்னென்ன புதிய பொறுப்பு?
IAS Officers Transfer: செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கல்கள் மாற்றம் செய்யபடுவதற்கான உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
IAS Officers Transfer: செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கல்கள் மாற்றம் செய்யபடுவதற்கான உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. அதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் ஐ.ஏ.எஸ் மற்றும் தூத்துக்குடி ஆட்சியராக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நீடிப்பார்கள் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவில் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதில் நிதித்துறை செயலாளராக உள்ள உதயச் சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் வினீத் பால் உற்பத்தியாளார்கள் மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் என். சுப்பையனை நியமனம் செய்துள்ளது.
அதேபோல், மாற்றுத் திறனாளிகள் துறை மேலாண் இயக்குனராக ஏ.கே. கமல் கிஷோர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்துள்ளார். சுகாதாரத்துறை முதனமை செயலாளார் ககன்தீப் சிங் பேடிக்கு கூடுதலாக சிறப்பு சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.