Annamalai on CM MK Stalin: “முதலமைச்சர் பேசிய அத்தனைக்கும் நாளை பதிலடி அறிக்கை வரும்” - அண்ணாமலை
”விழாவில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தமிழக சரித்திரத்திலேயே கரும்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. முதலமைச்சர் செய்திருப்பது சரித்திர தவறு” - அண்ணாமலை
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கட்டமைப்பு பணிகளுக்கான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் அவர் உரையாற்றினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாடு போன்ற வளர்ச்சி மாநிலங்கள் அளிக்கும் பங்கிற்கு ஏற்ப மத்திய அரசு நிதியுதவி மற்றும் திட்டங்களை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கிறேன்.
முதலில் மீனவர்களின் நலனுக்காக கச்சதீவை மீட்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும். பழமைக்கும் பழைமையாக உள்ள உலக செம்மொழியான தமிழை இந்திக்கு இணையான அலுவல் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதலை மத்திய அரசு அளிக்க வேண்டும் ” எனத் தெரிவித்தார்.
அதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சர் பேசிய அத்தனைக்கும் நாளை பதிலடி அறிக்கை வரும். ஜி.எஸ்.டி கவுன்சில் பற்றிய புரிதலே இல்லாமல், எழுதி கொடுத்ததை வாசித்திருக்கிறார் முதல்வர்” என தெரிவித்திருக்கிறார்.
As an ordinary citizen of India and a proud Tamil, I am absolutely ashamed by the appalling conduct of TN CM @mkstalin.
— K.Annamalai (@annamalai_k) May 26, 2022
Hon PM @narendramodi had come as the PM, not for a BJP programme. Our CM was expected to show grace but he ended up disgracing himself.
1/n
தொடர்ந்து பேசிய அவர், “விழாவில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தமிழக சரித்திரத்திலேயே கரும்புள்ளியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. முதலமைச்சர் செய்திருப்பது சரித்திர தவறு” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்