மேலும் அறிய

பாஜக ஆளும் மாநிலங்களில் தாய்மார்களுக்கு இவ்வளவு சலுகையா? - பட்டியல் போட்ட அண்ணாமலை

கோயம்புத்தூரில், வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது

 

அடுத்த 25 ஆண்டுகளில் விக்ஷித் பாரத் என்ற வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இன்றைய மாலை, கோயம்புத்தூரில், வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், பல சிறப்பான பேச்சாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்திருந்த வரிசையில், எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு, வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பின் சகோதரர் திரு. சுதர்சன் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசியல் என்பது, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி கடைப்பிடிக்கும் செயலாக்க அரசியல், மற்றவர்கள் பின்பற்றும், வாக்குகளுக்காக எந்த எல்லைக்கும் வளைந்து கொடுக்கும் அரசியல், குடும்ப அரசியல், இலவச அரசியல் என நான்கு வகையாக இருக்கிறது. இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை, நமது பிரதமர் தெளிவாக உணர்ந்திருப்பதால்தான், நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது. அதே நேரம், நம் தாய்மார்களுக்கான நலத்திட்டங்களும் அதிகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களான, அஸ்ஸாம் மாநிலத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 37 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ரூ.830 வழங்கப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2023 மார்ச் மாதம் முதல் 1 கோடியே 29 லட்சம் தாய்மார்களுக்கு, மாதம் ரூ. 1,250 வழங்கப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில், 2024 மார்ச் மாதம் முதல், 70 லட்சம் தாய்மார்களுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், 2024 ஜூலை முதல், 1 கோடியே 70 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படுகிறது. 2024 செப்டம்பர் முதல், ஒடிசா மாநிலத்தில் 80 லட்சம் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது. இவை தவிர, 40 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கு, இலவச அரிசி, சமையல் எரிவாயு சிலிண்டர், மருத்துவக் காப்பீடு என, நமது பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குத் திட்டமிடும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் நமது பிரதமர். சென்னை மெட்ரோ திட்டத்தில் தமிழக கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருந்த போது, தமிழக பாஜக சார்பில் நமது பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம். உடனடியாக ஒரே வாரத்தில், சென்னை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசுத் திட்டமாக அறிவித்து நிதி ஒதுக்கினார். கோவை மெட்ரோ திட்டத்துக்கும் அதே முயற்சியைத் தமிழக பாஜக முன்னெடுக்கும்.

நமது  நாட்டின் செழுமை வாய்ந்த பாரம்பரியம், உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறது.  லண்டன் அருங்காட்சியகத்தில், சுமார் 67 லட்சம் பொருள்கள் இருக்கின்றன. நமது நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட எத்தனையோ பொருள்கள் அவற்றில் அடக்கம். அந்தப் பொருள்கள் வழியாக, நமது நாட்டின் கலாச்சாரத்தை உலகம் படிக்கிறது. நம் குழந்தைகள் நமது கலாச்சாரத்தைத் தெரிந்து கொள்ள, நாம் கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நமது கலாச்சார வேர்களைத் திரும்பக் கொண்டு வரவேண்டும். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அதனைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

தமிழக அரசியல் கட்சிகள், மக்களுக்குப் பயன்படும் அரசியலைப் பேசுவதில்லை. தங்கள் தவறுகளுக்கு மத்திய அரசைக் குறைசொல்வது, காலாவதியான இந்தி எதிர்ப்பு என, திசைதிருப்பும் அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது. அறிவாளிகள் கூட அடிமையாக இருந்தால் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் எனும் நிலை தமிழகத்தில் இருக்கிறது. இதனால் பாதிப்புக்குள்ளாவது, நடுத்தர மக்கள்தான். நடுத்தர மக்கள் தங்கள் தேவைகளைக் குறித்துப் பேசும் வரை தமிழக அரசியல் மாறாது.

நடுத்தர மக்கள் தங்கள் முன்னேற்றத்துக்கான அரசியலை வெளிப்படையாக விவாதிக்க முன்வர வேண்டும். வளர்ச்சிக்கான அரசியல் குறித்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அரசியல் கட்சிகள் அவற்றை நிறைவேற்ற முன்வருவார்கள். மாற்றம் என்பது வாக்களிக்கும் கையில் மட்டும் இல்லை. நமது பேச்சிலும் இருக்கிறது. வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பின் இத்தகைய நிகழ்ச்சிகள், தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது போன்ற அமைப்புக்கள் உருவாகவும், நடுத்தர மக்கள், தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசவும் நல்வாய்ப்பாக அமைய வேண்டும். அறிவுசார்ந்த நாட்டைக் கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் விக்ஷித் பாரத் என்ற வளர்ச்சியடைந்த நாடாக உருவாக அனைவரும் இணைந்து உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget