இதை மேடையில் எப்படி பேச முடிகிறது முதல்வர் அவர்களே? - கொந்தளிக்கும் அண்ணாமலை
மதிப்பெண்கள் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழக பெண்கள்தான் முதன்மையாக உள்ளனர். ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி
கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள் பேசியுள்ளார்.
— K.Annamalai (@annamalai_k) December 30, 2024
கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக்…
கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே?
ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model.” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இங்குள்ள மாணவிகளைப் பார்த்து, Dravidian Stock ஆகப் பெருமைப்படுகிறேன். இதற்கு நேர் எதிராக பெண்கள் வளர்ச்சி பிடிக்காமல், வன்மம் பிடித்த Stock ஒன்று உள்ளது. பெண்கள் இன்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் எனப் பேசும் எக்ஸ்பயரியான ஸ்டாக் அது. இந்தத் திட்டத்தால் செலவு அதிகம் என்று பார்க்கவில்லை. தந்தைக்குரிய செயலாகத்தான் பார்க்கிறேன். மாணவிகளின் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன்.
மதிப்பெண்கள் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழக பெண்கள்தான் முதன்மையாக உள்ளனர். ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி. நாட்டிலேயே உயர் கல்வியில் சேர்வதிலும் தமிழக மாணவிகள்தான் டாப். வேலைக்குச் செல்வதிலும் அவர்கள்தான் டாப். இதைத்தான் தந்தை பெரியார் நினைத்தார். '' எனப் பேசினார்.