மேலும் அறிய
Advertisement
தருமபுரியில் தலையில் தேங்காய் உடைத்து குரும்பர் இன மக்கள் வினோத வழிபாடு...!
’’ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து, வினோத வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி, குல தெய்வமான வீரபத்திர சாமியை வழிபடுவது வழக்கம்’’
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குரும்பர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூக மக்களின் குல தெய்வமான வீரபத்திரசாமிக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஆடி பெருக்கு தினத்தில் தொடங்கி பவுர்ணமி வரை பல்வேறு கிராமங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வெளியூரில் உள்ள தங்களது சமூகத்தினர் எல்லோரும் ஒன்றிணைந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து, வினோத வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்தி, குல தெய்வமான வீரபத்திர சாமியை வழிபடுவது வழக்கம்.
தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த திருவிழாவுக்காக ஆண்கள், பெண்கள் என பலர் கையில் மஞ்சள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். மேலும் தினமும் ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பில் விரபத்திரன் சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து பவுர்ணமி நாளான இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வீரபத்திரன் சாமியை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதனையடுத்து கிராமத்திற்கு வெளியே வனப் பகுதியை ஒட்டிய வயல் வெளியில் சாமியை வைத்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர். இந்த சிறப்பு பூஜையில் குரும்பர் இன மக்களின் மன்னார்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சக்தி அழைத்து, அருள் வந்தாடும் பக்தர்களுக்கு, அகோ வீரபத்திரா என முழங்கி ஆரவாரம் செய்து, பரம்பரை பூசாரிகள் தலையில் மஞ்சள் வைத்து தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து இந்த திருவிழாவில் காப்பு கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள் என எல்லோரும், ஒவ்வொருவராக அகோ வீரபத்திரா என முழங்கி துள்ளி குதித்து வந்து தலையில் தேங்காய் உடைத்து, வினோத வழிபாடு செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையுடன் சாமிகாரம் எடுத்து கொண்டு மேள தாளத்துடன், ஊர்லவலமாக கோவிலுக்கு வந்தனர். இந்த விழாவுக்கு, பெங்களூர், சென்னை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள குரும்பர் இனத்தை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் குரும்பர் இன மக்களின் பாரம்பரிய வீரபத்திரன் சாமி திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாட்டினை காண, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்து திருவிழாவை கண்டு ரசித்து, சாமி தரிசனம் செய்தனர். மேலும் இதேப் பகுதியில் நேற்றும் நடைபெற்ற வீரபத்திர சாமி திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்த வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
மதுரை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion