மேலும் அறிய

கோடிக்கணக்கில் போலி தங்க நகைகள்.. வளைத்து பிடித்த BIS அதிகாரிகள்.. மக்களே உஷார்!

புதுக்கோட்டையில் பாலாஜி ஜூவல்லரி என்ற நகைக் கடையில் பிஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்டு போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட 643.36 கிராம் தங்க நகைகளை பிஐஎஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1643.36 கிராம் போலி தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​பாலாஜி ஜூவல்லரி என்ற நகைக் கடையில் பிஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்டு போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட 643.36 கிராம் எடை கொண்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பிஐஎஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.

போலி தங்க நகைகளை கண்டுபிடிப்பது எப்படி?

அதில், ஹால்மார்க் தனித்துவ அடையாள இலக்கம் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்திய தர நிர்ணய சட்டம், 2016ன் படி, மேற்கூறிய நகைக்கடைக்காரர் மீது குற்றவியல் புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது முதல் மீறலுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும், மேலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட ஐந்து மடங்கு வரை அபராதமும் செலுத்தப்பட வேண்டும்.

போலியான தங்க நகைகளை உற்பத்தியாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும், தவறான பாதையில் பொதுமக்களை வழிநடத்துவதைத் தவிர்க்கவும், இந்திய தரநிர்ணய அமைவனம் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

BIS அதிகாரிகள் அதிரடி:

நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு முன், பிஐஎஸ் கேர் செயலி மூலம் உரிமத்தின் நிலையை உறுதி செய்து கொள்ளலாம். உரிமம் இடைநிறுத்தப்பட்டது / ஒத்திவைக்கப்பட்டது / காலாவதியானது / ரத்து செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால், நுகர்வோர் புகாரைப் பதிவுசெய்யலாம்.

பிஐஎஸ் தரநிலைமுத்திரை (ISI MARK, பிஐஎஸ் பதிவு முத்திரை, பிஐஎஸ் ஹால்மார்க் 22K916 XXXXXX, பிஐஎஸ் மேலாண்மை அமைப்புகளின் சான்றிதழ்கள்) ஆகியவற்றின் தவறான பயன்பாடு பற்றிய தகவல்களை, மின்னஞ்சல் / கடிதம் / பிஐஎஸ் கேர் செயலி (கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்) மூலம் அமைவனத்திற்கு தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

இதையும் படிக்க: NEET JEE Free Coaching: நீட், ஜேஇஇ: மத்திய அரசின் இலவச கோச்சிங், பயிற்சித் தேர்வுகள்- கலந்துகொள்வது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
"அவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்" மாற்றுத் திறனாளிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்!
Embed widget