மகாகவிக்கு மரியாதை: வாழ்த்துக்களை பகிர்ந்த தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்!
திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளனர்.
இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாள். தமிழுருக்கும் வரை உன் புகழ் இருக்கும்... புகழ் இருக்கும் வரை உன் கவி இருக்கும். என்றும் தமிழரின் தன்னம்பிக்கையாய் நினைவில் குடியிருக்கும் மகாகவியின் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்து செய்திகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதோ அவற்றில் சில...
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
— M.K.Stalin (@mkstalin) December 11, 2021
திறம்பாட வந்த மறவன்!
அறம்பாட வந்த அறிஞன்!
படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று!
தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!
"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்"
— O Panneerselvam (@OfficeOfOPS) December 11, 2021
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்"
தமிழ் உணர்வையும்,பெண் விடுதலை உணர்வையும் ஊட்டிய மகாகவி பாரதியார் கனவு கண்ட பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம்! #பாரதியார் pic.twitter.com/vJoe8S7aml
தொன்மை கொண்ட தமிழ் மொழி மீது தீரா பற்று கொண்டவர்,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 11, 2021
சுதந்திர வேட்கையை அனைவரது நெஞ்சங்களிலும் விதைத்தவர்,
பெண் கல்வியை போற்றியவர்,
ஜாதிய வேறுபாடுகளை கலைந்தவர், திருக்குறளுக்கு அடுத்து குழந்தைகள் விரும்பும் பல பாடல்கள் தந்த
மகாகவி #பாரதியார் புகழை போற்றி வணங்குகிறேன். pic.twitter.com/U5XHpKeZyp
மூத்த தமிழுக்கு முண்டாசு கட்டிய முத்தான தமிழ் கவிஞர்.
— K.Annamalai (@annamalai_k) December 11, 2021
இலக்கியத்தை இனிப்பாக்கி சாமானியனும் படிக்க சாத்தியம் ஆக்கியவர்.
இவரால் முறுக்கி உயர்த்தப்பட்டது மீசை மட்டுமல்ல... முத்தமிழும் தான்!
தேசமெல்லாம் கொண்டாடும் ஆசு கவி பாரதியின் பிறந்த நாளில் அவர் புகழ் பாடுவோம்.
வந்தே மாதரம்! pic.twitter.com/OuSx0id3oI
1. எட்டயபுரத்தில் பிறந்து எட்ட முடியாத உயரங்களைத் தொட்ட பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று. தேச விடுதலை, பெண் விடுதலை, கல்வி, விளையாட்டு என அத்தனை குறித்தும் தொலைநோக்கு கொண்டிருந்த மாமனிதன். அவனது பிறந்தநாளில் நினைவு கூறுவது நமக்கு பெருமை!#Bharathiyar
— Dr S RAMADOSS (@drramadoss) December 11, 2021
காலத்தின் இயக்கத்தை வென்று, நிலைநிறுத்திவிடுகிற வல்லமையைத் தன் கவிதைகளாலும் அரசியற்கருத்துகளாலும் அடைந்தவன் என் பிரிய மாகவி பாரதி. பிறந்தநாள் வணக்கங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்