மேலும் அறிய
ஈரோட்டில் திடீர் சூறாவளியால் 30 ஏக்கர் வாழை சேதம்
ஈரோட்டில் திடீரென வீசிய சூறாவளியால் 30 ஏக்கர் அளவிலான வாழைப் பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

வாழைத்தோப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை திடீரென சூறைக்காற்று வீசியது. காளியூர், கணக்கம்பாளையம், அரவன்கோட்டை, டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் வீசிய இந்த திடீர் சூறாவளி பலத்த காற்றுடன் வீசியது. இதனால், அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 30 ஏக்கர் அளவிலான வாழை பயிர்கள் மிகக்கடுமையாக சேதம் அடைந்தது. கோடை காலம் நெருங்கும் வேளையில், இந்த திடீர் சூறாவளியால் வாழை பயிர்கள் சேதம் அடைந்திருப்பது விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















