அதிசார குரு பெயர்ச்சி 2025 - துலாம் ராசி
ஒளி ஒவ்வொரு ராசி மீது படும் பொழுதும் அவர்களுக்கான பாவம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே ஐந்தாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்து எண்ணங்களை விரிவாக்குகிறார்... இந்த தொழில் இப்படி செய்தால் என்ன? இந்த பணத்தை இதில் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்... வீடு முழுவதும் கவனித்துக் கொள்ள எவ்வளவு பணம் தேவைப்படும்... உற்றார் உறவினர்களோடு மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? என்று பலவிதமான சிந்தனைகளை உங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்... சில துலாம் ராசி அன்பர்களின் பிள்ளைகள் அல்லது மிகவும் நெருக்கமானவர்கள் பிள்ளை போன்று வளர்க்கப்பட்டவர்கள் எல்லாம் தூரதேசத்திற்கு வேலைக்காகவோ படிப்பிற்காகவோ சென்றிருப்பார்கள்... குறிப்பாக ஆன்மீகத்தில் நாட்டமே இல்லாதவர்களுக்கு கூட தற்பொழுது ஆன்மீகத்தின் மீது அதீத நாட்டம் ஏற்பட்டிருக்கும்... வராத தெய்வங்கள் எல்லாம் உங்கள் வீட்டு வாசலில் வந்து இந்த ராகு கேது பெயர்ச்சியில் நின்று இருக்கும்...
அதிசார குரு பெயர்ச்சி என்பது வியாழ பகவானின் ஒளி ஒவ்வொரு ராசி மீது படும் பொழுதும் அவர்களுக்கான பாவம் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.... இதுநாள் வரையில் ஒன்பதாம் பாவகத்தில் குரு பகவான் அமர்ந்து பாதி நல்ல பலன்களையும் பாதி சுமாரான பலன்களையும் உங்களுக்கு வாரி வழங்கியிருப்பார் ஆனால் தற்பொழுது பத்தாம் இடத்தில் குரு வந்து உச்சம் பெற போகிறார் பத்தில் கூறு வந்தால் பதவி பறிபோகும் அப்பா என்று ஒரு பாடல் உண்டு. அந்த பாடல் துலாம் ராசிக்கு பொதுவாக வேலை செய்வது இல்லை... காரணம் ஆட்சி உச்சம் பெறுகின்ற எந்த கிரகம் ஆனாலும் அவைகளுக்கு தனி பலம் உண்டு குறிப்பாக தனக்கு ரொம்பவும் பிடித்த வீடான கடகத்தில் குரு உச்சம் அடைவது துலாத்திற்கு பிரமோஷன் வேளையில் நல்ல தரத்தன்மை இடம் மாறுதல் வேலை மாறுதல் பெரிய பதவிகளில் அமர்தல் பொறுப்புக்கள் உங்களை தேடி வருதல் போன்றவை நடப்பதற்கு வாய்ப்பு உண்டு...
சரி அப்படியானால் வேலையில்லாமல் போகுமா என்றால் வேலை நிச்சயமாக இருக்கும் உங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் குரு பகவான் முயற்சிப்பார் ஆனால் என்னுடைய கருத்து பத்தாம் இடத்தில் குரு வரும் பொழுது வேலை மாறுவது நல்லது அல்ல காரணம் இந்த அதிகார குரு பெயர்ச்சி அக்டோபர் 18ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிவடைகிறது ஆகையால் பத்தாம் இடத்து ஒளியை வைத்து நீங்கள் இடம் மாற வேண்டிய அவசியம் இல்லை அடுத்த வருடம் முழு சுபரான குருபகவான் மிதுன ராசியிலிருந்து முழுவதுமாக கடக ராசிக்குள் வந்துவிடுவார் அந்த சமயத்தில் நீங்கள் இடம் மாறலாம் வேலை மாறலாம் அல்லது புதிய வேலை தொடங்கலாம் தொழில் ஏற்படுத்திக் கொள்ளலாம் அதுவரை எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்...
ஏற்கனவே ஆறாம் அதிபதி குரு பத்தாம் வீட்டில் அமரும் பொழுது பெரியதாக தொந்தரவுகளை கொடுப்பதில்லை ஆனால் மறைமுகமாக சில எதிரிகளை உருவாக்கி அதன் மூலம் சிக்கல்களைக் கொண்டு வரலாம்.... அதேபோல யாரேனும் உங்களிடம் உதவி என்று கேட்டால் அவர்களுக்கு உங்களால் முடியும் என்றால் செய்யுங்கள் இல்லை என்றால் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது பெரிய தொகை எடுத்துக் கொடுப்பதோ செய்ய வேண்டாம்.... குரு பத்தாம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களை பைனான்சியராக கூட மாற்ற கூடும் ஆனால் அவர் இருக்கப் போவது சில வாரங்கள் மட்டுமே என்பதால் அந்த ஒளியை அப்பொழுது மட்டும் கொடுத்துவிட்டு மீண்டும் மிதுன ராசிக்குள்ளேயே அவர் சென்று விடுவார் இப்படியான சூழ்நிலையில் படம் கையாளுதல் பார்த்து கவனமாக ஜாக்கிரதையாக செய்வது நல்லது... வியாழக்கிழமை தோறும் நவ கிரகத்தில் இருக்கும் குருவிற்கு விளக்கு போட்டு வாருங்கள்... ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்று 108 முறை சொல்லி வாருங்கள் பிரச்சனைகள் நீங்கி நன்மை பிறக்கும்...





















