அதிசார குரு பெயர்ச்சி 2025 - ரிஷப ராசி பலன்
அக்டோபர் 18ஆம் தேதி அதிசாரமாக குரு பெயர்ச்சி அடைந்து கடக ராசிக்குள் செல்கிறார்

அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அதிசார குரு பெயர்ச்சி 2025 - ரிஷப ராசி பலன்
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு லாப அதிபதி யார் என்றால் அது குரு தான்... மற்ற அனைத்து கிரகங்களும் நன்மையை வாரி வழங்கும்... ஆனால் குரு மட்டும்தான் உங்களை கோடீஸ்வரர் ஆக்குவார்... மற்ற அனைத்து ராசியினரை விட ரிஷப ராசிக்கும் கும்ப ராசிக்கு மட்டும்தான் குரு லாப வீட்டின் அதிபதியாக வருவார் அப்படி என்றால் பிறக்கும் பொழுது நீங்கள் குருவை இறுக பிடித்துக் கொள்ள வேண்டும்... பிடி என்றால் இரும்பு பிடி என்றால் என்பார்கள் அதுபோல பிடித்துக் கொண்டாள் வீடா....? பணமா....? காரா...? நல்ல வேலையா...? வாழ்க்கைத் துணையா...? சிறப்பான எதிர்காலமா...? என்ன வேண்டும் அனைத்தையும் குரு கொடுத்து விடுவார்...
தற்பொழுது அக்டோபர் 18ஆம் தேதி அதிசாரமாக குரு பெயர்ச்சி அடைந்து கடக ராசிக்குள் செல்கிறார் உங்கள் உடம்பு ரிஷப ராசியின் பிடியில் தான் இருக்கிறது.... தாயார் வருகத்தினர் ஏதோ புண்ணியம் செய்தவர்கள்.... அதனால் என்னவோ...? புத்தி கூர்மை உங்களுக்கு பிறப்பிலேயே அதிகமாக இருக்கும்..... பாட்டியின் வளர்ப்பும் அன்பும்.... அன்னையின் வளர்ப்பும் அன்பும்... பெரியம்மா, சித்தி போன்ற தாய்மார்களின் வர்க்கத்தினர்.... உங்களுக்கு எப்பொழுதுமே துணையாக தான் இருப்பார்கள்...
நீங்களே அவர்களை வெறுத்தால் கூட அவர்கள் உங்களை வெறுக்க மாட்டார்கள்... கடக ராசிக்கு அதிபதி சந்திரன் உங்கள் ராசி ரிஷபத்தில் வந்து உச்சம் அடைகிறார்.... கடக ராசியில் யார் உச்சம் அடைவார் நம் "குரு" தான்.... அப்படி என்றால் கடகத்திலே மிக ஒளிபொருந்திய குருவானவரே உச்சமடைகிறார் என்றால் ரிஷபத்திற்கு எவ்வளவு நன்மை செய்ய அவர் காத்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.... நாள்பட்ட தடைக்கு தற்பொழுது தீர்வு கிடைக்கப் போகிறது.... நடக்காமல் இருக்கும் காரியங்கள் கூட நடக்கும்... திருமணத்திற்காக வரன் தேடுபவர்களே உங்கள் வீட்டு வாயில் முன்பு வந்து அமரப் போகிறார்...
பணம்... பெயர்.... புகழ்... மூன்றும் தானே ஒரு மனிதனுக்கு தேவை. குரு உங்கள் வீட்டிற்கு மூன்றாம் வீட்டில் அமரும் பொழுது இதை மூன்றுமே அவர் தந்து விடுவார்... ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி ஆயிற்று அப்படி என்றால் சங்கடங்களை தருவாரோ என்று நீங்கள் கேட்கலாம் திருமணமாகப் போகின்ற ரிஷப ராசி பெண்களே அதிசார குரு பெயர்ச்சியின் மூலம் நீங்கள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது நல்ல மதிப்பு மரியாதை உடன் நடத்தப்படுவீர்கள்... குறிப்பாக உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு செல்பவர்கள் உள்ளூரிலிருந்து பிழைப்பதற்காக வெளியூரு செல்பவர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் வெளிநாடு செல்பவர்களுக்கு எல்லாம் இது ஏற்ற காலகட்டம் தான்...
வீட்டில் மழலை செல்வத்தின் குரலை நீங்கள் கேட்டு மகிழலாம்... நீண்ட நாட்களாக வீட்டை விற்க வேண்டும் நிலத்தை விற்க வேண்டும் என்று இருப்பவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலம்... இடம் நிலம் வீடு வாகனம் போன்றவற்றை விற்று அதன் மூலம் பெருத்த லாபத்தை நீங்கள் சம்பாதிக்கலாம்... இளைய சகோதரர் மூலமாக நல்ல செய்திகள் உங்களுக்கு வரப் போகிறது... பயந்து நடுங்கிக் கொண்டிருந்த காலம் போய் தைரியமாக பேசுகின்ற காலம் வருகிறது... ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வாருங்கள் சங்கடங்கள் தீரும்....





















