அதிசார குரு பெயர்ச்சி 2025 கும்ப ராசி
குரு பகவான் கடக ராசிக்கு உச்ச நிலையில் பிரவேசிக்கிறார் உங்களுடைய வீட்டுக்கு ஆறாம் வீடு பயம் தேவையில்லை...

அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே இந்த குரு பெயர்ச்சியை பொருத்தவரை மிதுன ராசியில் இருந்து மிக வேகமாக குரு பகவான் கடக ராசிக்கு உச்ச நிலையில் பிரவேசிக்கிறார் உங்களுடைய வீட்டுக்கு ஆறாம் வீடு பயம் தேவையில்லை... பொதுவாக ஆறாம் இடத்தில் சத்துரு வலுத்து இருப்பார் என்று சொல்லுவார்கள் ஆனால் பத்தாம் பாவகத்திற்கு அதாவது தொழிலுக்கு ஆறாம் பாவகம் பாக்கியஸ்தானமாக வருவதால் நிச்சயமாக தொழில் ரீதியான நல்ல வலுவான அமைப்பு உங்களுக்கு தற்போது ஏற்பட்டு இருக்கிறது... குறிப்பாக நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த பொற்காலம் அக்டோபர் 18 ஆம் தேதி ஆரம்பிக்கின்ற இந்த அதிசார குரு பெயர்ச்சிக்கு வேலை தொழில் வியாபாரம் போன்ற நல்ல பலன்களை உங்களுக்கு ஏற்படுத்தி தர போகிறது.... வேலையை தேடாமலே நீங்கள் இருந்தால் எப்படி வேலை கிடைக்கும்? ? வேலை தேடி விட்டேன் ஆனால் வேலை கிடைக்கவில்லை என்று கூறுகிறீர்களா இந்த அதிசார குரு பெயர்ச்சியில் தேடுங்கள் நிச்சயமாக நல்ல வேலை அமையும்...
கும்ப ராசிக்கு ஆறாம் இடத்தில் உச்சம் பெற்ற குரு இரண்டாம் வேட்டை பார்க்கிறார் தனம் அதாவது பணம் நீங்கள் சம்பாதிக்கின்ற பணம் பன்மடங்காக உயர வாய்ப்பு இருக்கிறது குறிப்பாக ஏற்கனவே ஒரு வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இரண்டாவதாக ஒரு வேலை வர சாத்திய கூறுகள் அதிகம்.... பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் ஆறாம் வீட்டில் இருப்பதால் நல்ல வேலை கிடைத்து விட்டது இவருக்கு என்று பொறாமையில் கூட எதிரிகள் உங்களுக்கு உருவாகலாம்....
ஆம் எதிரிகளை சமாளிப்பது கடினம் அல்லவா.... ? குருவே உங்களுடைய ஆறாம் வீட்டில் அமர்வதால் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு உடலைப் பற்றி எப்படி கவலை இருக்கும்? ஆனால் நிச்சயமாக உடல்ரீதியான முன்னேற்றம் உங்களுக்கு தேவை அக்கறை தேவை குறிப்பாக... அதிகப்படியான வேலையை பார்த்துவிட்டு உடலை கவனிக்காமல் இருக்காதீர்கள் சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சென்று பார்த்து அதற்கான மாத்திரை மருந்துகளோடு தீர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்....
திடீர் அதிர்ஷ்டம் அளிக்குமா என்று பல கும்ப ராசி அன்பர்கள் கேட்பார்கள் எட்டாம் இடம் தான் திடீர் அதிர்ஷ்டம் ஆனால் எட்டாம் இடத்திற்கு லாபஸ்தானம் என்று பார்த்தால் அது ஆறாமிடம் தான் மறைவாக இருக்கின்ற பொருட்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்றால் அதற்கு ஆறாம் இடம் துணை புரிய வேண்டும் அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர்கள் யார்? என்ன மாதிரியான அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆறாம் இடத்தை தான் பார்க்க வேண்டும்....
குருவை ஆக்டிவேட் செய்வதற்கு ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லி வாருங்கள் அக்டோபர் 18ஆம் தேதி ஆரம்பிக்கின்ற இந்த அதிசார குரு பெயர்ச்சி ஆனது உங்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொண்டுவரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை வீண் வம்புக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்....






















