TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கான புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்:
சத்யபிரதா சாஹூவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நியமித்தது. இதன் மூலம், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தற்போது இவர் தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக உள்ளார்.
The Election Commission of India appoints Archana Patnaik as the Chief Electoral Officer for #TamilNadu in place of Satyabrata Sahoo.@ECISVEEP pic.twitter.com/L4eqC1tvFK
— DD News (@DDNewslive) November 9, 2024
தலைமை தேர்தல் அதிகாரியாகப் பதவி ஏற்கும் முன், அர்ச்சனா தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கான அல்லது அனைத்துப் பணிகளுக்கான பொறுப்பையும் ஒப்படைப்பதை நிறுத்திக் கொள்வார் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஹூ ஏற்கனவே கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
ஒடிசாவைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் 2002ம் ஆண்டு பேட்ச்சின் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் ஆட்சியர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இதற்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ தமிழக அரசால் அனுப்பப்பட்ட குழுவில் அர்ச்சனா பட்நாயக்தான் இடம் பெற்றிருந்தார். அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தான் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து 2026 சட்டசபை தேர்தலை நடத்த உள்ளார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.