“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு.
![“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்! NTK Seeman threaten to periyarist in erode by election campaign “வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/6e97c4001ad080f277ba65f4d6656e791738129495973333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும் தூக்கி வீசுனா புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது எனவும் பெரியார் தொண்டர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான், “அய்யா பெரியார் நம் மூதாதையர் தொல்காப்பியனை ஆரிய அடிமை என்கிறார். நான் நேற்று வந்த பையன். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்ற வள்ளுவரை ஆரிய அடிமை என்கிறார். நாமெல்லாம் ஆரிய கூலி. பெரியார் திராவிட கூட்டாளி. ஆரிய கூட்டாளி. அதுமட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையாகவும் இருக்கிறார். ஆரிய கூட்டில்தான் அவர்கள் அரியணைக்கே வந்தார்கள்.
திமுகவையோ திராவிடத்தையோ எதிர்த்தால், ஆரிய கைகூலி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்துவார்கள். இவர்களைத்தான் நான் பிக்காலி என பெயர் வைத்திருக்கிறேன். என் பரம்பரையில் ஓடுது. எந்த சாதி, மதம், அரசியல், ஆதிக்கம், எந்த வழியில் அநீதி வந்தாலும் எதிர்த்து போர் புரியும் மரபு தமிழர் மரபு. எனக்கு எந்த திராவிடனும் கத்துத்தரவேண்டியதில்லை. போர் புரிவதை எந்த பெரியாரும் எனக்கு கற்றுத்தரவேண்டியதில்லை. என் ஜீன் ல இருக்கு. போர் புரியும் குணம். பெரியார் எந்த மதத்திற்கு எதிரான குறியீடு? தன்னுடைய பிறந்த நாளில் பார்ப்பனர்கள், நமக்கு கீழான சாதியினர், கிறிஸ்துவரகள், இஸ்லாமியர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று பேசியுள்ளார்.
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். என்ன நடக்கிறது என பார். ஏய். வச்சிருக்கேன். இன்னும் வீசவில்லை. வெடிகுண்டுகளை வீசினால் என்ன ஆவாய் என்று பார்த்து கொள்.
உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது. சேட்டையை வேறு எங்காவது வைத்துக்கொள்.
தெருநாயை கல் எறிந்தால் 4 தெரு தள்ளிப்போய் குரைப்பது போல் போட்டோ பொய் பொய் என சொல்கிறீர்கள். திராவிட தத்துவம் செத்து போய்விட்டது. தமிழ் தேசியம் சத்தோடு வருகிறது.
ஓட்டுக்கு காசு கொடுக்காமல் என்னை வெல்ல முடியுமா? அது என்ன தந்தை பெரியார்? பிரபாகரன் மட்டும் திரு. பிரபாகரன்? தலைவர் பிரபாகரன் என சொல்லமாட்டீங்களா? நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மேதகு தலைவர் பிரபாகரன் என போட வைப்போம்” எனப் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)